தமிழகத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் நண்பர்கள் கொடுத்த வித்தியாசமான பரிசு சமூகவலைத்தளங்களில் பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது.
தமிழகத்தில் இருச்சக்கர வாகனத்தில் செல்லும் இருவரும் தலைகவசம் அணியவேண்டும் என உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
அப்படி ஹெல்மட் இல்லாமல் சென்றால் அபாரதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை ஆவடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மோகன்-விசாலி ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு வந்த உறவினர்கள் பல்வேறு விதமான பரிசுகளை புதுமண ஜோடிக்கு அளித்து வந்தனர்.
அப்போது, மணமக்களின் நண்பர்கள் சிலர் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இரண்டு ஹெல்மட்டை பரிசாக வழங்கினர், அதோடு அவர்கள் இருவரையும் ஹெல்மட்டை அணிய செய்தனர். பின்னர் இருவரும் ஹெல்மெட் அணிந்து கொண்டு புகைப்படத்திற்கு நண்பர்களுடன் போஸ் கொடுத்தனர். இதனை திருமண விழாவிற்கு வந்த உறவினர்கள் புதுமையுடன் பார்த்தனர். இந்த பரிசு அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் விதமாக இருந்தது. இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் பாராட்டுக்களை பெற்று வருகிறது.