சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டிய உணவுகள்..!!

இன்று எம்மில் பலர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள், சாப்பிடக்கூடாத உணவுகள் என்ன என்று பார்ப்போம்.

சாப்பிடக்கூடாத உணவுகள்

கிழங்கு வகைகள் – உருளைக்கிழங்கு, சேனைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, பரங்கிக்காய்.

பழ வகைகள்- வாழைப்பழம், மாம்பழம், பலாப்பழம், அன்னாசிப்பழம், சீத்தாப்பழம், சப்போட்டா பழம், தர்பூசணி, பேரிட்சை.

பால் வகைகள் – எருமைபால், பாலாடை, தயிர், வெண்ணெய், நெய், பால்கோவா.

அசைவ உணவு – ஆட்டுக்கறி, மாட்டுக்கறி, பன்றிக்கறி, ஈரல், மூளை, முட்டையின் மஞ்சள் கரு.

தானிய வகைகள் – பிரட், பன், கேக், பப்ஸ், ஐஸ்கிரீம், நெய்பிஸ்கட், மிளகாய் சாஸ், தக்காளி சாஸ், ஊறுகாய், தேங்காய், வேர்கடலை.

ஏனையவை – தேங்காய் எண்ணெய் வனஸ்பதி, பாமாயில், குளிர்பானங்கள், சர்க்கரை, வெல்லம், இனிப்பு பலகாரங்கள், சிப்ஸ், வடை, முறுக்கு, பூரி, சமோசா போன்ற எண்ணெயில் பொரித்த பலகாரங்கள்.

சாப்பிடக்கூடிய உணவுகள்

மேற்கண்ட காய்கறிகளை தவிர மற்ற எல்லாக்காய்களையும், கீரைகளையும் சாப்பிடலாம். பீட்ரூட், கேரட் அளவோடு சாப்பிடலாம்.

பழங்கள் – ஆப்பிள், கொய்யா, ஆரஞ்சு, பேரிக்காய், மாதுளை, சாத்துக்குடி, பப்பாளி, திராட்சை.

பால் உணவு – மோர், பசும்பால், கொழுப்பு நீக்கப்பட்ட பால்,

அசைவம் – கோழிக்கறி, மீன்(வறுக்கக்கூடாது), முட்டையின் வெள்ளைக்கரு.

எண்ணெய் வகைகள் – சூரியகாந்தி எண்ணெய், தவிட்டு எண்ணெய், நல்ல எண்ணெய், ஆலிவ் எண்ணெய் (ஒரு நபருக்கு மாதம் ½ லிட்டர் என்ற அளவில்.

ஏனைய உணவுகள் – டீ, காபி (அளவோடு), வெள்ளரி, முளைகட்டி பாசிப்பயிறு, சுண்டல், முந்திரி, பாதாம், வால்நட்.