சந்திரயான் 2..பற்றி கே.சிவன் யாரும் எதிர்பாக்காத தகவலை வெளியிட்டார்.

டெல்லி: சந்திரயான் 2ல் இருக்கும் விக்ரம் லேண்டர் நிலவில் வேகமாக மோதி இருக்கவோ அல்லது வேகமாக இறங்கி இருக்கவோ வாய்ப்புள்ளது என்று இஸ்ரோ இயக்குனர் சிவன் தெரிவித்துள்ளார்.

சந்திரயான் 2ல் இருந்த விக்ரம் லேண்டர் தொடர்பான புது புது தகவல்கள் கிடைத்து வருகிறது. விரைவில் விக்ரம் லேண்டர் தொடர்பான புகைப்படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சந்திராயன் 2ல் உள்ள விக்ரம் லேண்டருடன் இஸ்ரோ தொடர்பை இழந்தது. நேற்று அதிகாலை 1.48 மணிக்கு சந்திரயான் 2ன் லேண்டருடன் இஸ்ரோ தொடர்பை இழந்தது. இப்போது வரை அதை தொடர்பு கொள்ள முடியவில்லை.

இன்று காலை சந்திரயான் 2ல் இருக்கும் விக்ரம் லேண்டரை கண்டுபிடித்து இருக்கிறார்கள். ஆம் நிலவிற்கு மேல் சுற்றும் சந்திரயான் 2 ஆர்பிட்டர் இந்த விக்ரமை மேலே இருந்து படம் பிடித்து, கண்டுபிடித்துள்ளது.

இந்த நிலையில் விக்ரம் லேண்டர் நிலவில் சாப்ட் லேண்டிங் செய்திருக்க வாய்ப்பில்லை என்று இஸ்ரோ இயக்குநர் கே சிவன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், நாங்கள் விக்ரம் லேண்டரை கண்டுபிடித்துள்ளோம். அது நிலவின் மீது கடுமையாக இறங்கி இருக்க வாய்ப்புள்ளது. ஆனால் லேண்டர் உடைந்து இருக்குமா என்று கூற முடியாது.

நிலவில் மோதிய போது அதன் பாகங்களுக்கு ஏதாவது நேர்ந்ததா என்று கூற முடியாது. சமயங்களில் விக்ரம் லேண்டர் நாம் எதிர்பார்த்த வேகத்தில் இறங்கி இருக்க வாய்ப்பில்லாமல் போகலாம். நாம் நினைத்த வேகத்தை விட அதிக வேகத்தில் மோதி இருக்கலாம்.

நான்கு கால்களில் அது இறங்காமல் போய் இருக்கலாம். இதனால் ஏற்பட்ட ஷாக் காரணமாக அழுத்தத்தால் லேண்டரில் ஏதாவது அடிபட்டு இருக்கலாம், ஆனால் எதையும் இப்பொது உறுதியாக கூற முடியாது, என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.