முகநூல் காதலால் வாழ்க்கையை இழக்க துணிந்த மாணவி..!

உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான அநீதிகள் தொடர்ந்து வருகிறது. பெண்கள் நாடக காதல் வலையில் விழுந்து தங்களின் வாழ்க்கையை பரிதாபமாக இழந்து வருவதும்., வாழ்க்கை சீரழிந்ததை எண்ணி கண்ணீருடன் தற்கொலை முடிவு எடுப்பதும்., ஒரு தலை காம காதலை ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறி கொலை செய்யப்படுவதும்., புகைப்படங்கள் மாபிங் செய்யப்பட்டு இணையத்தில் வெளியாவதும் தொடர்கதையாகியுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடி பகுதியை சார்ந்தவர் கவிதா (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது). இவர் பெரம்பலூர் பகுதியில் இருக்கும் தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி துறையில் பயின்று வருகிறார். இவருக்கு முகநூலில் கிடைத்த நட்பின் மூலமாக., எதிர்முனையில் இருந்த தருமபுரி மணலூர் பகுதியை சார்ந்த பாலமுருகன் என்பவனுடன் பழகி வந்துள்ளார்.

இந்த பழக்கமானது நாளடைவில் காதலாக மாறவே., இருவரும் கடந்த ஒரு வருடமாக முகநூலின் மூலமாக காதலித்து வந்துள்ளனர். மேலும்., பாலமுருகன் 10 ஆம் வகுப்பு வரை பயின்று இருந்தாலுமே., நாடக காதல் லீலைகளில் மன்னனாக திகழ்ந்து., கவிதாவை கவரும் வகையிலான காதல் கவிதைகளையும்., பாடல்களையும் பதிவு செய்து வந்துள்ளான்.

இதனையடுத்து ஒரு வருடமாக முகநூலில் பேசியே காதலித்து வந்துள்ளோம்., இருவரும் நேரில் சந்திக்கலாம் என்று கூறி., மணலூருக்கு வர வேண்டி மனமுருகி பேசியுள்ளான். இவனது பேச்சில் மயங்கிய மாணவி மண்ணூருக்கு செல்லவே., மாணவியை சீரழிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு ஆபாசமாக நெருங்கி பேசியுள்ளான். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி., பாலமுருகனை திட்டிவிட்டு திட்டக்குடிக்கு திரும்பியுள்ளார்.

இதற்கு அடுத்து மாணவி பாலமுருகனிடம் பேசுவதையும் துண்டித்த நிலையில்., பாலமுருகனை அலைபேசி அழைப்பையும் ஏற்க மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பாலமுருகன் மாணவியுடன் எடுத்த புகைப்படத்தை முகநூலில் வெளியிட்டதை அடுத்து., அதிர்ச்சியடைந்த மாணவி பாலமுருகனை தொடர்பு கொண்டு திட்டியுள்ளார்.

மேலும்., உனது எண்ணங்கள் இப்போதே இப்படி உள்ளது என்று கூறி இறுதி முறை என எச்சரித்துள்ளார். இதனால் கடும் ஆத்திரத்திற்கு உள்ளான பாலமுருகன் தனது அலைபேசியில் இருந்த புகைப்படத்தை இணையத்தில் பதிவிடவே., இதனை கண்டு அதிர்ச்சியடைந்த கவிதா இது குறித்து பெற்றோரிடம் கூறவே., இதனையடுத்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் காவல் துறையினர் பாலமுருகனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.