ஆவணி மாதம். நிறைய முகூர்த்தங்களும், திருமணம் மற்றும் நிச்சயதார்த்தம் போன்ற நல்ல காரியங்கள் அதிகம் நடக்கும் காலம். இது போன்ற விசேஷங்களுக்கு தங்கம் வாங்குவது பொதுவான வழக்கம்.
ஆனால் தங்கத்தின் விலையோ தாறுமாறாக எகிறிக் கொண்டு இருக்கிறதே என கவலை அடைந்தோரிற்கு மகிழ்ச்சியான செய்தி
தங்கத்தை வாங்க தற்போது ஆள் இல்லாத நிலையில் ஆபரணத் தங்கத்தின் விலையும் ஒட்டு மொத்தமாக சரிந்து இருக்கிறது.
கடந்த செப்டம்பர் 04, 2019 அன்று 22 கேரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை சுமார் 30,150-க்கு விற்கப்பட்டது. ஆனால் இன்று அதே 22 கேரட் ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை சுமார் 29,350 ரூபாய்க்கு விற்பனை ஆகி வருகிறது.
சுமாராக பவுனுக்கு 800 ரூபாய் சரிந்து இருக்கிறது. ஆனல் இந்த ஒரு வருடத்தில் மட்டும் எவ்வளவு விலை அதிகரித்து இருக்கிறது தெரியுமா..? சுமார் 30%
கடந்த ஜனவரி 01, 2019-ல் 31,650 ரூபாய்க்கு விற்கத் தொடங்கிய 24 கேரட் 10 கிராம் தங்கத்தின் விலை பிப்ரவரி 20, 2019 அன்று 35,130 என்கிற புதிய உச்சத்தைத் தொட்டது. பிப்ரவரி முதல் ஜூன் 20, 2019 வரை 24 கேரட் 10 கிராம் தங்கத்தின் விலை இந்த 35,130 என்கிற உச்சத்தைக் கடக்கவே இல்லை.
அதன் பின், ஜூன் 21, 2019 அன்று தான் மீண்டும் தங்கத்தின் விலை ஏற்றம் காணத் தொடங்குகிறது. ஜூன் 21, 2019 அன்று 24 கேரட் 10 கிராம் தங்கத்தின் விலை 35,380 என்கிற உச்சம் தொடுகிறது. அதன் பின் தங்கத்தின் விலை (Gold Price) இன்று வரை நிதானமாக ஏற்றம் கண்டு இன்று செப்டம்பர் 04, 2019 வரை 41,070 என்கிற உச்ச விலையில் விற்கப்பட்டு வருகின்றன. ஆக 2019-ம் ஆண்டில் மட்டும் சுமாராக 29.7 % ஏற்றம் கண்டு இருக்கிறது.
உலக பொருளாதார மந்த நிலை, ரெசசன் பயம், வட்டி விகித பிரச்னைகள் என பல காரணிகள் இருந்தாலும் அடிப்படையாக தங்கத்தை வாங்கிப் பயன்படுத்த ஆள் இல்லை என்றால் விலை சரியத் தானே செய்யும்.
எனவே தங்கம் வாங்க விரும்புபவர்கள் கொஞ்சம் காத்திருந்து தங்கம் விலை குறையும் போது, நல்ல வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு தங்கத்தை வாங்கி விடவும்.
இல்லை என்றால் மறுபடியும் உலக பொருளாதார காரணிகளைச் சொல்லி தங்கத்தின் விலை அதிகரிக்கத் தொடங்கிவிடப் போகிறது..!