பொதுவாக உடல் நலத்திற்கு தேவையான நல்ல உணவுகளை மட்டுமே உண்பது தான் ஆரோக்கியமான ஒன்றாக இருக்கும். ஆனால் சில சமயங்களில் அந்த ஒரு ஆரோக்கியமான உணவை கூட ஒரு சில உணவு பொருட்களுடன் சேர்த்து சாப்பிடும் போது அது விஷ தன்மையாக மாறிவிடும்.
ஒரு சில உணவுடன் மற்ற உணவு பொருட்களை சேர்த்து சமைக்கும் போது அது விஷமாக மாறும் தன்மை கொண்டதாக உள்ளது. அவ்வாறு விஷமாக மாறக்கூடிய உணவு பொருட்கள் என்ன என்பதை இங்கு பார்க்கலாம்.
கோழிகறி மற்றும் தயிர்
- கோழிக்கறியுடன் தயிர் சேர்த்து சாப்பிட்டால் அது நஞ்சாக மாறும். தேனுடன் தயிர் மாமிசம் கொழுப்பு எண்ணெய் ஆகியவற்றை உண்டாலும் நஞ்சாகும். ஊசிப்போன பதார்த்தம், நாறும் உணவு, நுரை வந்த உணவு, நூல் விட்ட உணவு ஆகியவற்றை உண்டால் கொடிய நோயை உண்டாக்கி உடல் இளைத்து மரணத்தை ஏற்படுத்தி விடும்.
ஆடு மற்றும் மாட்டு இறைச்சி
- ஆடு மற்றும் மாட்டு இறைச்சி உடன் உளுத்தம் பருப்பு முள்ளங்கி பால், தேன் துவரம் பருப்பு முளைகட்டிய பருப்பு வகைகளில் ஏதேனும் ஒன்றோ அல்லது பலவகை கலந்து சமைத்தாலும் நஞ்சாகும்.
உளுந்து மற்றும் முள்ளங்கி
- உளுந்து முள்ளங்கியும் சேர்ந்தாலும் நஞ்சாக மாறும். மஞ்சளை கடுகு எண்ணெயில் வருது உணவுகள் சேர்த்துக்கொண்டால் நஞ்சாக மாறும். இறைச்சியுடன் கள் குடித்தல்,காராமணியுடன் நாரை சமைத்தல், தாமரை விதை உடன் தேனூறல் இவை அனைத்தும் விஷமாக மாறும். தயிர் மோர் உடன் வாழைப்பழம் சேர்த்து சாப்பிட்டாலும் நஞ்சாகும்.
- மணத்தக்காளி கீரையை இரவில் சமைத்து காலையில் உண்டால் அனைத்தும் கடும் நோயைத் தரும். நோய் வருவதுடன் உடல் நலனை பாதிப்படைய செய்து மரணத்தை ஏற்படுத்தும் என்றும் கூறப்பட்டுள்ளது.
- இவற்றில் தயிர், மோர், பால், முள்ளங்கி, பருப்பு வகைகள் உளுந்து பழங்கள் இறைச்சி, மணத்தக்காளிக் கீரை, ஆமணக்கு, வாழைப்பழம் போன்ற உணவுகள் பிற உணவு வகைகளோடு சேர்ந்து உணவாகும் போது அந்த உணவை நஞ்சாக மாறும் வாய்ப்பு உள்ளது.
- எனவே மேற்குறிப்பிட்ட உணவு பொருட்களுடன் எந்தெந்த உணவு பொருளை சேர்த்து சாப்பிட கூடாது என்பது நன்கு தெரிந்துகொண்டு அதனை தொடாமல் இருப்பது நல்லது.