சீக்ரெட் ரூமில் இருந்து சேரன் அனுப்பிய கடிதம்!

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கடந்த வாரம் வெளியேறிய சேரன், சீக்ரெட் ரூமில் தங்கவைக்கப்பட்டுள்ளார். அங்கிருந்து வீட்டில் நடக்கும் அனைத்து விஷயங்களை கவனித்து வருகிறார்.

நேற்று கவின் மற்றும் லொஸ்லியா தனியாக பேசுவது குறித்து, சீக்ரெட் ரூமில் இருந்தே சேரன் தன்னுடைய கருத்தை மக்களுக்கு தெரிவித்தார்.

இந்நிலையில், தற்போது வெளியாகி உள்ள மூன்றாவது பிரோமோ வீடியோவில், சீக்ரெட் ரூமில் இருந்து கவினுக்கு சேரன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதை பிக்பாஸ் வீட்டில் தர்ஷன் படித்துக்காட்டுகிறார்.

அதில், அவ்வுளவு தூரம் சொல்லிவிட்டு வந்தேன். உங்கள் விருப்பங்களை வெளியே வந்து பேசிக்கொள்ளலாம். இருவரும் விளையாட்டில் கவனம் செலுத்துங்கள் என்றும், அப்படி இருந்தும் லொஸ்லியாவிடம் இங்கேயே முடிவை சொல்ல சொல்வது நியாயமா இல்லை. அதை வலியுறுத்தலாமா? நீங்க பண்ணுவது ரொம்ப தவறாக தோன்றுகிறது. உடனே நிறுத்திக்கொள்ளுங்கள் என்று கேட்டுள்ளார்.