அமேசான் காட்டுத்தீ முற்றிலும் அணைக்கப்பட்டதா?

உலகின் நுரையீரல் என்று அழைக்கப்படும் அமேசான் மழைக்காடுகள் பெரு, பராகுவே, பொலிவியா, பிரேசில் ஆகிய நாடுகளில் பரந்து விரிந்து காணப்படுகிறது. இந்த காட்டில் கடந்த ஒன்றரை மாதங்களுக்கும் மேலாக பல ஆயிரக்கணக்கான ஹெக்டேர் பரப்பளவு நிலங்களில் தீப்பற்றி எரிந்து வருகிறது.

காட்டில் பற்றி எரியும் தீயை அணைக்க பொலிவியா அதிபர் ஈவோ மொரேல்ஸ், ரஷ்யா மற்றும் பிரான்ஸ் நாட்டு வீரர்களின் உதவிகளை நாடியதை அடுத்து, அந்த நாடுகள், பொலிவியா நாட்டுக்கு உதவ தங்களது வீரர்களை அனுப்பி வைத்துள்ளது.

இதனைத்தொடர்ந்து, நேற்று தனது மிகப்பெரிய ராணுவ விமானத்தை ரஷ்யா பொலிவியாவுக்கு அனுப்பி வைத்தது. சான்டாக்ரூஸ் விமான நிலையம் வந்த ரஷ்யா விமானம் மற்றும் அதன் குழுவினரை அந்த நாட்டு அதிபர் ஈவோ மொரேல்ஸ் வரவேற்றார்.

இந்த விமானத்தில் தீ அதிகம் பற்றி எரியும் இடங்களுக்கு தண்ணீர் எடுத்து செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. பிரேசில் அதிபர் போல்சனரோவை போல காட்டு தீயை அணைக்க எந்த நாட்டின் உதவியையும் நாடாதது போல் அல்லாது, பிரான்ஸ் உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் உதவியுடன் காட்டுத்தீயை விரைந்து அணைக்கும் முயற்சியில் பொலிவியா அதிபர் ஈடுபட்டு வருகிற்றார்.