உலகச் சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டியில் தொடர்ச்சியாக மூன்றாவது வருடமாக இந்திய வீராங்கனை பிவி சிந்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். முதல் இரண்டு வருடங்களில் தோல்வியை தழுவிய பிவி சிந்து வெள்ளிப் பதக்கத்துடன் இந்தியா திரும்பினார்.
இந்த வருடம் மூன்றாவது முறையாக அவர் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய நிலையில் இந்த வருடமாவது அவர் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஜப்பான் வீராங்கனை நாசோமி உடன் மோதிய சிந்து ஜப்பான் வீராங்கனையை தனது அதிரடியான ஆட்டத்தினால் திணறடித்து ஒரு அபாரமான வெற்றியை பெற்றார்.
சிந்துவின் வெற்றிக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாராட்டு, அன்புமணி ராமதாஸ் M.P உள்ளிட்ட தலைவர்களும் சிந்துவுக்கு பாராட்டுத் தெரிவித்துள்ளனர். பொதுமக்கள், மத்திய அமைச்சர்கள், திரையுலக பிரபலங்கள், விளையாட்டு வீரர்-வீராங்கனைகள் என சிந்துவுக்கு பாராட்டு மழை பொழிந்தனர்.
மேலும் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்வது தான் எனது லட்சியம் என தெரிவித்த அவர் தற்பொழுது அபரதான போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். மிகவும் கவர்ச்சியான போஸில் இருக்கும் பிவி.சிந்துவின் அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றது.