நாமக்கல் மாவட்டத்தில் உள்ள புதுசத்திரம் அருகேயுள்ள உடுப்பம்பகுதி ஊராட்சி ஒன்றிய பகுதியில் நடுநிலைப்பள்ளியானது அமைந்துள்ளது. இந்த பள்ளியில் ஆசிரியராக பணி செய்து வருபவரின் பெயர் சரவணன். இவர் அதே பள்ளியில் இருக்கும் அங்கன்வாடியில் பணியாற்றி வரும் இளம்பெண்ணுடன் தகாத உறவு வைத்துள்ளார்.
இவர்கள் இருவருக்கும் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்னதாக இருந்தே கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படும் நிலையில்., இவர்கள் இருவரும் அங்கன்வாடியிலேயே அவ்வப்போது உல்லாசமாக இருந்துள்ளனர். இப்படி இருந்த நிலையில் அங்கண் வாடி சிறுவன் ஒருவன் இதை பார்த்துவிட்டான். பார்த்து வீட்டில் சென்று கூறியுள்ளான்.
இதனையடுத்து இவர்கள் இருவரையும் கையும் களவுமாக பிடிக்க எண்ணிய மக்கள்,பள்ளிக்கு சென்று அவர்கள் இருவரையும் தேடியபோது இருவரையும் காணவில்லை.
பள்ளியின் கழிவறையில் இருந்து அந்த சமயத்தில் இருவரும் வெளியே வந்துள்ளனர். பொதுமக்கள் கூடியிருப்பதை பார்த்து கழிவறை சுவர் வழியாக அந்த பெண் ஏறி குதித்து தப்பிக்க சரவணன் உதவியுள்ளார்.
இதனை அறிந்த பொதுமக்கள் சரவணனிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சமயத்தில், சரவணன் முன்னுக்கு பின் முரணாக பதிலை அளிக்க ஆத்திரமடைந்த பொதுமக்கள் சரவணனை நையப்புடைத்துள்ளனர்.
மேலும், பள்ளி மாணவர்கள் முன்னிலையிலேயே இருவரும் ஆபாச சைகையில் செய்வதை அறிந்து இருந்ததால் ஆத்திரமடைந்த பொதுமக்களுக்கு, நல்ல அருமையான வாய்ப்பு கிடைத்ததை விடக்கூடாது என எண்ணி தூக்குபோட்டு மிதித்துள்ளனர். இந்த விஷயம் குறித்து தகவலை அறிந்த காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சரவணனை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.