உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த நான்ஹே சிங் என்பவர் தன்னுடைய உறவினர் ஒருவரின் வீட்டிற்கு இறுதிச் சடங்கிற்காக சென்றுள்ளார். அதன் பின்னர் வீடு திரும்பிய அவருக்கு வீட்டில் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டில் இருந்த அனைவரும் மயக்கமான நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
உடனடியாக அவர்களை மருத்துவமனையில் அனுமதித்தார். அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் சாப்பிட்ட உணவில் விஷம் கலந்திருப்பதாக கூறியுள்ளார். இதன் பின்னர், காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
நடத்தப்பட்ட விசாரணையில், நான்கே சிங்கின் மகள் ஒருவருடமாக ஒரு இளைஞரை காதலித்து வந்ததாகவும், அந்த காதலுக்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், இதன் காரணமாக வீட்டில் இருந்தவர்களுக்கு விஷம் கலந்து கொடுத்து விட்டு தன்னுடைய காதலனுடன் ஓடி விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
அந்த இளைஞர் தான் என்னுடைய மகளுக்கு விஷம் கலக்க சொல்லிக் கொடுத்துள்ளார் என்றும் காவல் துறையினரிடம் அவர் தெரிவித்துள்ளார். காவல்துறையினர் தலைமறைவாக இருக்கும் அவரது மகள் மற்றும் காதலனை தேடி வருகின்றனர்.