ஸ்ரீ சாந்தை வம்பிக்கிழுக்கும் ஹர்பஜன்.!

இன்று நாடு முழுதும் மலையாள மக்களால் ஓணம் பண்டிகை மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. அனைவரும் ஓணத்தை கொண்டாடும் விதத்தில், வெள்ளை நிற கேரளா உடையணிந்து மிகச்சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். பிற மாநிலத்தில், இருப்பவர்களும் நண்பர்களுக்கு  ஓணம் பண்டிகை வாழ்த்துக்களை தெரிவிக்கின்றனர்.

தமிழக நெட்டிசங்களால் செல்லமாக தமிழ் சிங்,தமிழ் புலவர் என அழைக்கப்படும் ஹர்பஜன் சிங் தனது ஓணம் பண்டிகை வாழ்த்துக்களை மலையாளிகளுக்கு தெரிவித்துள்ளார். மேலும், அதில், நட்சத்திர வீரர் ஸ்ரீ சாந்தை  டேக் செய்து இந்த வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.

ஹர்பஜன் சிங் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில், “ஓணம் திருநாள் வாழ்த்துக்களை என்னுடைய அனைத்து மலையாளி சகோதரிகளுக்கும் குறிப்பாக என்னுடைய நண்பர் ஸ்ரீ சாந்திற்கும் தெரிவித்து கொள்கிறேன்’ என கூறியுள்ளார்.

கடந்த 2008ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில், ஸ்ரீசாந்தை ஹர்பஜன் சிங் கன்னத்தில் அறைந்த சம்பவம் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் ஹர்பஜன் சிங் தற்பொழுது, ஓணம் பண்டிகை வாழ்த்துக்களை கூறியதோடு குறிப்பாக ஸ்ரீ சாந்திற்கு என தனிப்பட்ட முறையில் குறிப்பிட்டு கூறியுள்ளார்.