பிரான்சில் 140 கி.மீற்றர் வேகத்தில் காரில் சென்ற இரண்டு டிரைவரிகளை பொலிசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பிரான்சின் Alsace நகரின் Sainte-Croix-en-Plaine இருக்கும் வீதியில் கடந்த ஞாயிற்றுக் கிழமை பொலிசார் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
இந்த வீதியில் 80 கி.மீற்றர் வேகத்திலே செல்ல வேண்டும்.
இந்நிலையில் தான், குறித்த நாளில் இரண்டு கார்கள் போட்டி போட்டு அந்த வீதியில் 140 கி.மீற்றர் வேகத்தில் செல்வதை பொலிசார் கண்டனர்.
அதன் பின் உடனடியாக பொலிசார் அவர்களை விரட்டிச் சென்று தடுத்து நிறுத்தியுள்ளனர். அதன் பின் வாகனத்தில் இருந்த 23 மற்றும் 31 வயதுடைய நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட முதல் கட்ட விசாரணையில், அவர்கள் தங்களுடைய பி.எம்.டபில்யூ கார்களை ஒரு ஸ்போர்ட்ஸ் கார் போன்று வடிவமைத்து போட்டியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.
தொடர்ந்து பொலிசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இருவருக்கும் முதற்கட்ட லைசன்ஸ் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் தெரிவித்துளளது.