இந்திய கிரிக்கெட் வரலாற்றில் தவிர்க்க முடியாத கேப்டன் என்றால் தோனியைச் சொல்லலாம். டி20 உலகக் கோப்பை, ஒருநாள் உலகக் கோப்பை, டெஸ்ட்டில் நம்பர் ஒன் எனப் பல்வேறு உச்சங்களுக்கு இந்திய அணியை வழிநடத்தி சென்றவர். இருந்தபோதிலும் சமீபகாலமாக தோனி மீது பல்வேறு விமர்சனங்களும் வைக்கப்படுகிறது.
குறிப்பாக இந்தாண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் தோனி மீது பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்படுகிறது. உலகக் கோப்பை தொடருக்குப் பின்னர் நடைபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரிலிருந்து, தோனி விலகி ராணுவத்தில் பயிற்சி மேற்கொண்டார்.இதனை தொடர்ந்து நடைபெற்ற தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான அணியிலும் தோனி இடம்பெறவில்லை.
இந்நிலையில் திடீரென இந்திய ட்ரெண்டிங்கில் தோனியின் பெயர் இடம் பெற்றது, அதற்கு கோலியின் ட்விட்டர் பதிவு தொடக்கமாக அமைந்தது. அந்த ட்வீட்டில், என்னால் மறக்க முடியாத ஆட்டம் இந்த ஆட்டம். சிறப்பான இரவு. தோனி, என்னை ஒரு ஃபிட்னெஸ் சோதனையில் ஓடவைப்பதைப் போன்று ஓட வைத்தார் எனப் பதிவிட்டார்.
இதை இன்று கோலி ஷேர் செய்ய என்ன காரணம் எனத் தெரியாமல் பலர் குழப்பத்தில் இருக்கின்றனர். சிலர், இன்று மாலை தோனி தனது ஓய்வை அறிவிக்க உள்ளார் என்று கூறுகின்றனர்.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து தோனி ஓய்வு பெறுவதாக வரும் செய்திகள் வதந்தி என அவரது மனைவி அவரது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். தோனியின் மனைவி சாக்ஷி தனது ட்விட்டர் பக்கத்தில் ‘அதெல்லாம் வதந்திகள் என பதிவு செய்துள்ளார்.
Its called rumours !
— Sakshi Singh ??❤ (@SaakshiSRawat) September 12, 2019