வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் உள்ள அம்மையப்பன் நகர் பகுதியை சார்ந்தவர் சுரேஷ் (வயது 38). இவர் தையல் பணியாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவியின் பெயர் ராதிகா (வயது 33). இவர்கள் இருவருக்கும் கடந்த ஏழு வருடங்களுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.
திருமணம் முடிந்த சமயத்தில் இருந்தே சுரேஷ் பணிகளுக்கு செல்லாமல்., மது அருந்திவிட்டு ஊர் சுற்றி வந்துள்ளார். சுரேஷின் செயலால்., கணவன் – மனைவிக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்துள்ளது. இதனால் அவ்வப்போது சண்டை சச்சரவும் ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த சமயத்தில்., கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னதாக வழக்கம் போல கணவன் – மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கடுமையான ஆத்திரத்தில் இருந்த சுரேஷ்., வீட்டில் இருந்த மண்ணெண்ணெய்யை ராதிகாவின் மீது ஊற்றி தீவைத்துள்ளார்.
உடல் முழுவதும் தீப்பற்றி எறிந்த நிலையில்., தீயின் வீரியம் தாங்க இயலாமல் இராதிகா கூச்சலிடவே., இவரின் அலறல் சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த காக்கும் பக்கத்தினர்., ராதிகாவை மீட்டு அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
மேலும்., இது குறித்து காவல் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர்., ராதிகாவுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்து., இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள துவங்கினர்.
அந்த விசாரணையில்., கணவனை கைது செய்து விசாரணைக்கு பின்னர் சிறையில் அடைத்த நிலையில்., மேல் சிகிச்சைக்காக தருமபுரி மருத்துவமனையில் ராதிகா அனுமதிக்கப்பட்டு இருந்தார். தருமபுரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை மேற்கொண்டு வந்த நிலையில்., சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.