குழந்தைகள் விரல் சூப்புவது வழக்கம். இது அனைவருக்கும் இருக்கும் ஒரு பொதுவான பழக்கம் தான். விறல் சூப்பாத குழந்தைகளை பார்ப்பதே மிகவும் கடினமானது தான். அனைத்து பெற்றோர்களும் செய்யும் மிகப்பெரிய தவறு, அவர்கள் விரல் சூப்புவதை தடுப்பது தான்.
குழந்தைகள் விரல் சூப்பும் போது அதனை நாம் தடுக்க கூடாது. ஏனென்றால், விரல் சூப்புவதால் குழந்தைகளுக்கு தன்னம்பிக்கையை அதிகரிக்கிறதாம். பசி எடுக்கும் பொழுதும், தூக்கம் வரும் பொழுதும், குழந்தைகள் அதிகமாக விரும்புவார்கள். இது அவர்களுக்கு பல விதங்களில் நன்மை பயக்கின்றது.
அதுபோலதான் குழந்தைகளிடம் ஒரு விஷயத்தை செய்யாதீர்கள் என்று கூறும் பொழுது தான் அதை மீண்டும் மீண்டும் செய்வார்கள். அப்படி விரல் சூப்புவதை நாம் தடுக்க முயலும் பட்சத்தில், அவர்கள் திரும்பத் திரும்ப அதனை செய்வார்கள். ஒரு கட்டத்தில் அது அவர்களுக்கு கோபத்தை வரவழைக்கும்.
சிறு வயதிலேயே அதிக கோபப்படும் பழக்கத்தை நாம் தடுக்கும் பொழுது ஏற்படுத்தும். குழந்தைகள் விரல் சூப்பும் பொழுது அவர்களுக்கு வேறு ஏதாவது வேடிக்கை காட்டி அவர்களை திசை திருப்ப முயற்சிக்க வேண்டும். மற்றபடி நேரடியாக அவர்களை அதட்டி, மிரட்டி பணிய வைப்பது மிகவும் ஆபத்து நிறைந்தது.