மைதானத்தில் திடீரென சுருண்டு விழுந்த மாணவனுக்கு ஏற்பட்டநிலை!

பாடசாலை மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்த மாணவன் திடீரென மயங்கிவிழுந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தம்புளை பகுதியைச் சேர்ந்த பாடசாலையொன்றில் 9 ஆம் தரத்தில் கல்விபயிலும் மாணவனுக்கே இந்த துயரமான நிலை ஏற்பட்டுள்ளது.,

கீழே விழுந்த நிலையில், மாணவர்களால் ஆசிரியர்களுக்கு அறிவிக்கப்பட்ட பின்னர், தம்புளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று (12) மதியம் குறித்த மாணவன் உயிரிழந்துள்ளார்.

தம்புளை, பெல்வெஹர பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவன் பிறந்ததில் இருந்து இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்ததாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் தம்புளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.