இணையத்தளத்தில் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள் என்ன?

இன்றுள்ள நவீன தொழில்நுட்ப வளர்ச்சியானது துவக்க காலத்தில் பல நன்மைகளை தந்தாலும்., பின்னாளில் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்தும் நபர்களால் பெரும் பிரச்சனை தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. தொழில்நுட்பத்தின் வளர்ச்சி என்பது நன்மைகளை செய்வதற்கு மட்டுமே என்பது நமக்கு புரிய வேண்டும்.

இன்றுள்ள சூழ்நிலையால் பெரும்பாலான இளைஞர்களில் இருந்து சிறியவர்கள் என பெரும்பாலானவர்கள் இணையத்தின் மூலமாக தவறான பாதைக்கு செல்கின்றனர். இவர்களின் எண்ணத்தால் அதிகளவு பாதிப்பிற்கு உள்ளாக்குவது பெண்கள் தான். அந்த வகையில்., இணையத்தில் அதிகளவு உலா வரும் பெண்கள்., முகநூலின் மூலம் எவ்வாறு வாழ்க்கையை தடம் மாற்றுகிறது என்பது குறித்து இனி காண்போம்.

பொதுவாக முகநூலில் பெண்கள் பதிவிடும் புகைப்படத்திற்கு அல்லது பதிவிற்கு., அவர்களுக்கு பிடித்தவாறு கருத்துக்கள் மற்றும் லைக்குகளை குவித்து வந்தால்., அவர்களுடன் பெண்கள் பழக துவங்கிவிடுகின்றனர். மேலும்., பழகுவதற்கு சக தோழிகள் இருந்தும்., பாசம் காண்பிக்க ஆட்கள் இல்லை என்பதால்., முகநூலில் பாசத்தினை தேடி ஏமாற்றம் அடைகின்றனர்.

இதுமட்டுமல்லாது சில பெண்கள் முகநூலில் லைக்குகளை வாங்குவதற்காக செய்யும் செயல்களால் பின்னாளில் பெரும் பிரச்சனையை சந்திக்கின்றனர். தனது நட்பு பட்டியலில் இருக்கும் நபர்களிடம் பாசத்திற்க்காக ஏங்கி., தனது சுய விபரத்தை பகிர்ந்து பெரும் பிரச்சனைக்கு உள்ளாகின்றனர். மேலும்., காதலர்களுக்குள் இருக்கும் பிணைப்பை கெடுக்கும் வகையில் இணையத்தளம் உள்ளது.

எந்த விதமான பிரச்சனைக்கும் உடனடி காதல் முடிவு என்று இருபாலரும் தங்களுக்குள்ளான நட்பினை முறித்து., தோல்வியடைந்த ஆணின் எண்ணத்தால் பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக பதிவு செய்து., பெரும் பிரச்சனைக்கு பெண்ணை உள்ளாக்கி., பெண்ணின் வாழ்க்கையை சீரழிகிறான். இது போன்ற குற்ற சம்பவங்கள் கடந்த சில வருடங்களாக அதிகளவில் தொடர்ந்து வருகிறது.

பாசத்துக்காக பெண்கள் ஏங்கி முகநூலில் நட்பை தேடினாலும்., அங்கு அவர்களின் அழகிற்கும் – கவர்ச்சிக்கும் – உடலுக்கும் தான் என பல காரணிகளால் அன்புகள் போன்ற கூர் அம்புகள் தொடர்ந்து குத்திக்கொண்டு வரும். மேலும்., இளம் வயதுள்ள பெண்கள் புதிய நட்புடன் பழகுதல் மற்றும் ஈர்ப்பு., வெளியே செல்லுதல் என்று பல விதமான பிரச்சனைகளுக்கு உள்ளாகியுள்ளனர். முகநூலில் பிரச்சனை வருவதும்., வராமல் இருப்பதும் அவரவர் முகநூல் உபயோகம் செய்யும் தனித்துவதில் மட்டுமே உள்ளது. தேவையற்று உங்களின் சுய விபரம் மற்றும் அலைபேசி எண்களை பகீராதீர்கள்…

உங்களின் தாய் – தந்தை மற்றும் சகோதரர்களை விட உண்மையானவர்கள் மற்றும் பாசத்தை காண்பிக்க வேறு ஆட்கள் இல்லை… உங்களின் மீது அவர்கள் பாசத்தை வெளிப்படையாக காண்பிக்க வில்லை என்று எண்ணி., தேவையற்ற வீண் பிரச்சனைகளுக்கு உள்ளாகாதீர்கள். உங்களுக்கு என்ன நடந்தாலும்., நீங்கள் தவறே செய்திருந்தாலும் உங்களுக்காக நிற்பவர்கள் அவர்கள் மட்டுமே.. நன்றி..