வனிதாவை காண பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தது யார் தெரியுமா.?

பிக்பாஸ் நிகழ்ச்சி ஒவ்வொருநாளும், புதிய, புதிய சம்பவங்கள் நடைபெறுவதால் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இதற்கு காரணம் போட்டியாளர்களின் உறவினர்கள் ஒவ்வொரு நாளும் வந்து செல்வது தான். அந்த வகையில், இதுவரை பிக்பாஸ் வீட்டிற்கு முக்கிய உறவினர்கள் மற்றும் லாஸ்லியாவின் குடும்பத்தினரும் வந்து சென்றனர்.

லாஸ்லியாவின் தந்தையின் வருகையானது பிக்பாஸ் வீட்டில் அனைவரையும் உருகச் செய்தது. இது காண்போருக்கு மிகப்பெரிய உருகத்தை ஏற்படுத்தியது. தந்தை-மகள் பாசம் என்பது எப்படிப்பட்டது என்பதை அனைவருக்கும் உணர்த்தும் வகையிலும் அவரின் வருகையானது அமைந்தது.

இந்த நிலையில், அடுத்ததாக யாருடைய உறவினர்கள் பிக்பாஸ் வீட்டிற்கு வருவார்கள் என எதிர்பார்த்த நிலையில், தர்ஷனின் உறவினர்கள் வந்து சென்றனர்.

இதனை தொடர்ந்து தற்போது வனிதாவின் குழந்தைகள் பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளே நுழைய பரபரப்பாக காணப்பட்ட வனிதா உடனடியாக ஜாலி மூடுக்கு வந்து ஓடிச்சென்று அவர்களை துள்ளிக்குதித்து வரவேற்றார். இதனால் வனிதா மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்றார்.

அதன்பின்னர், பிக்பாஸ் வீட்டில் இருக்கும் அனைவரும் அந்த குழந்தைகளுடன் ஓடிப் பிடித்து விளையாடுவது என பிக்பாஸ் வீடே கலகலப்பாக காணப்படுகின்றது. அதற்கான புரோமோ தற்போது வெளியாகி வைரலாகி இருக்கின்றது.