லொஸ்லியாவின் காதல் கதைக்கு முற்றுப்புள்ளி வைத்த நபர்.!

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் போட்டியாளர்களின் குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவராக வந்து போட்டியாளர்களை பார்த்துச் செல்கின்றனர். அந்த வகையில் நேற்று முன்தினம் லொஸ்லியாவின் குடும்பத்தார் வந்திருந்தனர்.

அப்போது லொஸ்லியாவின் நடவடிக்கைகளால் வெளியில் பெரும் அவமானமாக இருப்பதாக அவரது தந்தை வருத்தப்பட்டு திட்டினார். மறைமுகமாக கவினுடனான காதலை முறித்துக் கொள்ளும்படி லொஸ்லியாவின் தந்தை கூறினார். பெற்றோரின் வேதனையைப் புரிந்து கொண்ட லொஸ்லியாவும், கவினும் இனி அப்படிச் செய்வதில்லை என முடிவெடுத்தனர்.

இனி மேல் பிக்பாஸ் வீட்டில் கவின், லொஸ்லியா காதல் காட்சிகள் இருக்காது எனத் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று வந்த சேரன் மகள், லொஸ்லியாவைப் பற்றி அவருக்கு எடுத்து கூறினார். நிஜ மகள் என்ற உரிமையில் லொஸ்லியாடன் இனி பேசக்கூடாது என கூறினார்.

அப்படிப் பேசினால், இனி நான் பேச மாட்டேன் எனவும் அவர் செல்லமாக கோபப்பட்டால். மகளின் பேச்சுக்கு மறுபேச்சு பேசாமல், அதனை சேரனும் ஏற்றுக்கொண்டார். எனவே, இனி அவர் லொஸ்லியாவுடனும் கொஞ்சம் இடைவெளியை ஏற்படுத்திக் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் கவினும், சேரனும் ஒதுங்கி இருப்பதால் லொஸ்லியா தனிமையில் தவிர்த்து வருகிறார். லொஸ்லியா மீது அதிகம் பாசம் வைத்தவர் சேரன், லொஸ்லியா நெருங்கி பழகியவர் கவின். இவர்கள் இருவரிடம் பேசாமல் லொஸ்லியா எப்படி இருக்க போகிறார் என்று தெரியவில்லை.