தமிழ் திரையுலகில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தின் மூலமாக பிரபலமடைந்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். இந்த படத்திற்கு பின்னர் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் பெரிய அளவிலான படத்தின் வாய்ப்புகள் ஏதும் கிடைக்காத காரணத்தால், அவ்வப்போது வரும் சில திரை படங்களில் நடித்து வருகிறார். இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் ஆபாசமாக நடித்திருந்த இவர், துருவங்கள் பதினாறு மற்றும் நோட்டா படத்தில் நடித்திருந்தார்.
சமூகவலைத்தளங்களில் சுறுசுறுப்பாக இருக்கும் யாஷிகா, தனது டிவிட்டர் பக்கத்தில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துவருகிறார்.
கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் விடீயோக்களை பதிவு செய்துவந்த யாஷிகா, தற்போது நட்பின் அருமையை உணர்த்தும் வகையில் வீடியோ ஒன்றை டிவிட்டரில் பதிவு செய்துள்ளார். அதில் வயதான இருமுதியவர்கள் தங்களது நட்பினை ஆத்மாத்மமாக வெளிப்படுத்தியுள்ளனர். இது பார்ப்போரை கண்கலங்க வைக்கிறது.
Friendship forever ❤❤❤ pic.twitter.com/H8Vz1tUmiR
— YashikaAannand (@Yashikaaannandd) September 12, 2019