பௌர்ணமி அன்று கோவில்களிலும், வீட்டிலும் விளக்கேற்றி வழிபடுவதால் நிறைய நற்பலன்களை அடைய முடியும். ஒவ்வொரு மாதத்திலும் வரும் பௌர்ணமியில் ஒரு சிறப்பு அடங்கியுள்ளது. அதை அறிந்து விரதமிருந்து இறைவனை வழிபட்டால் நன்மைகள் வீடு தேடி வரும்.
ஆவணி மாத பௌர்ணமி அற்புதமான நாள். வெள்ளிக்கிழமையில் பௌர்ணமி வருவது கூடுதல் சிறப்பு.
ஆவணி மாத பௌர்ணமியில் விரதமிருந்து விளக்கேற்றி வழிபடுவதன் மூலம் தீராத கடன்கள் தீரும். பண வரவு அதிகரிக்கும்.
அதுமட்டுமின்றி ஒவ்வொரு கிழமையிலும் வரும் பௌர்ணமிக்கு ஏற்றார்போல் வழிபாடு செய்தால் மேலும் சிறப்பான பலன்களைப் பெறலாம்.
வெள்ளிக்கிழமை :
அம்பிகைக்கு நான்கு வண்ணங்கள் கொண்ட ஆடையை அணிவித்து, மல்லிகை மலர்கள் சூட்டி, அர்ச்சனை செய்து, வைடூரிய ஆபரணம் அணிவிக்க வேண்டும். நாட்டுச் சர்க்கரையால் அபிஷேகம் செய்து, முக்கனிகள், கல்கண்டு, பொங்கல், நெய் சாதம் நைவேத்தியம் செய்ய வேண்டும். இந்த பூஜை செய்வதன் மூலம் திருமணத்தடைகள் நீங்கும். பிரிந்த தம்பதியினர் ஒன்று சேர்வர். பணவரவு அதிகரிக்கும். வராக்கடன் வரும். கடன் தொல்லைகள் தீர்ந்து நன்மை பெறலாம்.
கிரகதோஷம் போக்கும் பௌர்ணமி :
சந்திரன் மனதை ஆள்பவன் என்பதாலேயே பௌர்ணமியில் மனிதர்களின் மனதைப் போல கடலிலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன.
ஸ்ரீசக்கர நாயகியான ஆதிபராசக்தி பதினாறு அம்சங்களாக பௌர்ணமி தினத்தில் மகா திரிபுரசுந்தரியாக அருள்பாலிகிறார் என்பது ஐதீகம்.
இம்மாதம் வெள்ளிக்கிழமையில் பௌர்ணமி வருவது கூடுதல் சிறப்பம்சம். கிரக தோஷங்களை நீக்கவும், பில்லி, சூனியம், ஏவல் போக்கவும் பௌர்ணமி வழிபாடு அவசியம்.
அம்மனை வழிபடுவதோடு சத்யநாராயணரை வழிபடுவதும் கூடுதல் சிறப்பம்சம்.
ஒவ்வொரு மாதமும் வரும் பௌர்ணமி நாளன்று கிரிவலம் செல்வது வழக்கம். கிரிவலம் என்பது மலையை வலம் வருதல் என்பதாகும். எந்த நாளில் கிரிவலம் செல்வதால் என்ன நன்மை கிடைக்கும்?
திங்கட்கிழமை கிரிவலம் செல்ல இந்திர பதவி கிடைக்கும்.
செவ்வாய்க்கிழமை கிரிவலம் செல்ல கடன், வறுமை நீங்கும்.
புதன்கிழமை கிரிவலம் செல்ல கலைகளில் தேர்ச்சியும், முக்தியும் கிடைக்கும்.
வியாழக்கிழமை கிரிவலம் ஞானம் கிடைக்கும்.
வெள்ளிக்கிழமை கிரிவலம் செல்ல வைகுண்டப் பதவி கிடைக்கும்.
சனிக்கிழமை கிரிவலம் செல்ல பிறவிப்பிணி அகலும்.
ஞாயிற்றுக்கிழமை கிரிவலம் வந்தால் சிவலோக பதவி கிட்டும்.