பெண்ணை கும்பலாக நொறுக்கிய ஊர் மக்கள்.! நடந்தது என்ன ???

தேனி மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர் மீது அதே பகுதியை சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி சுப்பன் தெருவைச் சேர்ந்த பாண்டி என்பவரின் மனைவி சந்தியா என்பவர், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினராக இஇருக்கின்றார். இவர் அந்த பகுதியைச் சேர்ந்த பெண்களிடம் சீட்டு பிடித்து வந்துள்ளார். சம்பவ தினத்தன்று மகளிர் சுய உதவிக்குழு கட்டிடத்தில் இருந்திருக்கின்றார்.

அப்போது, சிலர் தாங்கள் கட்டிய சீட்டு பணம் ரூ.6 லட்சத்தை உடனே திருப்பித் தர வேண்டும் என கூறி தகராறு செய்தனர். இதன் காரணமாக அங்கிருந்த பொருட்களை தூக்கி அடித்து நொறுக்கி, சந்தியாவையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இது குறித்து தேனி கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், கோர்ட்டு உத்தரவின்படி வாழையாத்துப்பட்டியைச் சேர்ந்த குமரேசன், புனித வள்ளி, பிரபா, விஜி, கார்த்தீஸ்வரி, ரகு, நந்தகோபால், ஆகியோர் அடங்கிய 40 பேர் கொண்ட கும்பல் மீது வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குறிப்பிட்ட காலம் முடிந்த பின்னர் தன் சீட்டுப்பணம் திரும்பி வாங்க முடியும் என்ற நடைமுறை விதிக்கு எதிராக நடந்த இந்த சம்பவம் காவல் துறையினரை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.