பிக்பாஸ் சீசன் 3ஆல் பிரபலமடைந்தவர் லொஸ்லியா, முதலில் ரசிகர்கள் கூட்டம் ஆர்ப்பரித்தாலும், அவரது செயல்பாடுகளால் வெறுப்பை சம்பாதிக்க ஆரம்பித்தார்.
இருப்பினும் அவர் வெளியே வந்ததும் நிச்சயம் சினிமாவில் வாய்ப்பு காத்திருக்கிறது என பலரும் கூறிவருகின்றனர்.
இதே நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் கூட, உங்களுக்காக திரையுலகம் வாய்ப்பு தர காத்துக்கொண்டிருக்கிறது இவ்வளவுதான் நான் இப்போதைக்கு கூறுவேன். இப்போது வேண்டுமானால் நீங்கள் லாஸ்லியா வாக இருக்கலாம் ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கலாம் வரும்போது கெயின்லியாவாக (gainலியா)வெளியே வருவீர்கள் என்று கூறினார்.
இந்நிலையில் ராஜா ராணி சீரியலின் இயக்குனரான பிரவின் அளித்த பேட்டியில், பிக்பாஸ் முடிந்ததும் ராஜா ராணி சீரியலின் இரண்டாம் பாகம் எடுக்கவிருப்பதாகவும், அதில் லொஸ்லியா நிச்சயம் இடம்பெற்றிருப்பார் எனவும் தெரிவித்துள்ளார்.
ஆக பிக்பாஸ் முடிந்ததும் லொஸ்லியா நட்சத்திரமாக ஜொலிக்கவிருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை.