5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்து இருந்தது. இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டது.
இருப்பினும், இந்த திட்டத்தை அமல்படுத்துவது குறித்து அந்தந்த மாநில அரசுகள் முடிவெடுத்துக் கொள்ளலாம் என்றும் அறிவித்து இருந்தது.
இந்த நிலையில், மேலும், 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு வைக்க வேண்டும் என்ற மத்திய அரசின் திட்டம் குறித்து ஆலோசனை நடத்தி கொண்டிருப்பதாகவும்,
விரைவில் இது குறித்து, பொறுத்திருந்து பாருங்கள். நல்ல முடிவு எடுக்கப்படும் எனவும் அமைச்சர் செங்கோட்டையன் கூறி இருந்தார்.
இந்த நிலையில், தற்பொழுது 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என்றும், இது நடப்பு கல்வி ஆண்டு முதல் நடைமுறைக்கு வருகிறது என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.