தேவையான பொருட்கள் :
தோசை அல்லது இட்லி மாவு – 2 கப்,
வாழைக்காய் – 2,
எலுமிச்சைச் சாறு – 2 டீஸ்பூன்
பச்சைப் பட்டாணி – கால் கப்,
பச்சை மிளகாய் – 2,
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.
கொத்தமல்லி – சிறிதளவு,
இஞ்சி – சிறிய துண்டு.
செய்முறை:
பச்சை பட்டாணியை வேக வைத்து கொள்ளவும். வாழைக்காயை நன்றாக வேக வைத்து எடுத்து தோல்,உரித்து மசித்து எடுத்து கொள்ளவும்.
பச்சை மிளகாயை எடுத்து, கொத்தமல்லி மற்றும் இஞ்சியை பொடி, பொடியாக நறுக்கி எடுத்து கொள்ளவும்.
வேக வைத்து மசித்த பச்சைப் பட்டாணி, வாழைக்காய், இஞ்சி துண்டுகள், நறுக்கிய பச்சை மிளகாய், எலுமிச்சைச் சாறு, கொத்தமல்லி, உப்பு ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் சேர்த்து கெட்டியாகப் பிசைந்து எடுத்து கொள்ளவும்.
தோசை மாவை அகலமான பாத்திரத்தில் போட்டு, பிசைந்து வைத்துள்ள வாழைக்காய் கலவையில், கொஞ்சம் எடுத்து உருண்டையாக உருட்டி, மாவில் தோய்த்து எடுத்துக் அடுப்பில் எண்ணெயை காயவைத்து பொரித்து எடுத்தால் சுவையான வாழைக்காய் ஸ்டஃப்டு போண்டா தயார்.