அனல் பறக்கும் இறுதி நாள் ஓட்டிங்…. பிக் பாஸில் இருந்து வெளியேறியது இவரா?

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி இதுவரை இல்லாத அளவு சூடுப்பிடித்துள்ளது. நிறைய வித்தியாசங்களும், மாறுதலும் கொண்டு மக்களிடையே அதிக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்காக பிக் பாஸ் நிகழ்ச்சி கொண்டு வரும் விளம்பரங்களுக்கும் அளவே இல்லை என்றே கூற வேண்டும்.

இந்நிலையில் இந்த வாரம் நடைபெற்ற நாமினேஷன் முடிவில் கவின், வனிதா, ஷெரின்,சாண்டி, தர்ஷன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

முதல் நாள் எவிக்‌ஷனில் புலம் பெயர் மக்கள் பெரும்பாலும் தர்ஷனுக்கு அதிகமான வாக்குகளை பதிவு செய்திருந்தனர்.

எனவே, இந்த வாரம் வனிதா நிழ்ச்சியில் இருந்து வெளியே செல்ல போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேவேளை, கொஞ்சம் மந்தமாக சென்று கொண்டிருந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் வனிதாவின் என்ட்ரிக்கு பிறகுதான் பரபரப்புடன் இருந்தது.

அவர் வெளியே சென்றால் பரபரப்பு குறையலாம். இதனால் ஷெரின் கூட நிகழ்ச்சியில் இருந்து வெளியே செல்ல அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகின்றது. இதனால் ரசிகர்கள் குழப்பத்திலும் சோகத்திலும் உள்ளனர்.