பிக்பாஸ் இன்று சாண்டியின் மனைவியையும் மகள் லாலாவையும் அழைத்து வந்துள்ளார்.
சாண்டி தனது மகள் லாலாவை பார்த்ததும் கட்டிப்பிடித்து அழுதுள்ளார். தற்போது, வீட்டிற்குள் வந்த சாண்டியின் மகள் அணிந்திருந்த டி ஷர்ட் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
லாலா அணிந்திருக்கம் டி ஷர்ட்டில் குருநாதா என அச்சிடப்பட்டுள்ளது. பிக்பாஸை சாண்டி குருநாதா குருநாதா என்றே அழைத்து வருகிறார்.
பாய்ஸ் கேங்கை சேர்ந்தவர்கள் குருநாதா என்று அச்சிடப்பட்ட டி ஷர்ட்டை அணிந்திருந்தனர். இந் நிலையில் இன்று லாலாவும் அப்படி ஒரு டி ஷர்ட்டை அணிந்து வந்து அசத்தியிருக்கிறார். இது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.