மத்திய அரசின் இந்த ஆண்டு பட்ஜெட் தாக்களில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 12.5 சதவீதமாக அதிகரிக்கப்பட்டதன் காரணமாக ஆபரணத் தங்கத்தின் விலையானது தொடர்ந்து ஏற்றம் கண்டு வந்தது.
அதன்படி, இன்று சவரனுக்கு 224 ரூபாய் வரை குறைந்து 22 கேரட் தங்கத்தின் ஒரு கிராம் விலையானது ரூ.3,584 ஆகவும், ஒரு சவரன் தங்கத்தின் விலையானது ரூ.28,672 ஆகவும் இன்று விற்பனை செய்யப்பட்டது.
அதே போல் 24 கேரட் அளவிலான தங்கத்திற்கு ஒரு கிராம் ரூ.3,741 ஆகவும் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.29,928 விற்பனை செய்யப்பட்டது.
வெள்ளி விலை இன்று கிராமுக்கு 48.70 காசுகளாகவும், கிலோ வெள்ளி ரூ.48,700ஆகவும் இன்று விற்பனை செய்யப்பட்டது. இன்று 12 ரூபாய் வரை குறைத்துள்ளது தங்கம் விலை இறங்கி வருவது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.