தேவையான பெருட்கள்:
இட்லி – 4
வெங்காயம், தக்காளி – தலா 2
பட்டாணி – கால் கப்
இஞ்சி – ஒரு துண்டு
பச்சை மிளகாய் – 2
எண்ணெய் – 2 டீஸ்பூன்
கடுகு – அரை டீஸ்பூன்
உளுந்து, கடலைப் பருப்பு – தலா ஒரு டீஸ்பூன்
சாம்பார் பொடி – ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு.
செய்முறை:
1) வாணலியில் எண்ணெய் விட்டுச் சூடானதும் கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு போட்டுத் தாளியுங்கள்.
2) பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்குங்கள். அதனுடன் இஞ்சி விழுது, நறுக்கிய பச்சை மிளகாய், சிறிதளவு உப்பு போட்டு நன்றாக வதக்குங்கள்.
3) பட்டாணி, தக்காளித் துண்டுகள் போட்டு வதக்குங்கள். கலவை நன்றாக வதங்கியதும் சாம்பார் பொடி கலந்து ஒரு நிமிடம் வேகவிடுங்கள்.
4) பிறகு கால் கப் தண்ணீர் விட்டுக் கொதித்து, எல்லாமே சேர்ந்தார்போல வந்ததும் இட்லியைத் துண்டுகளாக்கிச் சேருங்கள். நன்றாகக் கிளறி கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை தூவி இறக்கிவையுங்கள்.