நமது உடலின் ஆரோக்கியத்திற்கு தினமும் குளிப்பது மிகவும் நல்லது. காலையில் குளிப்பதனால் நம்முடைய உடல் லேசாகவும், நிம்மதியாகவும் இருக்க உதவும். மேலும், அடிக்கடி தலை குளிப்பதன் மூலம் உடல் சூட்டை குறைத்து குளிர்ச்சி அடையவும் இது பயன்படுகிறது. அதுபோல காலை நேரத்தை விட இரவு நேரத்தில் குளிப்பதன் மூலம் அதிக நன்மைகள் நமக்கு ஏற்படுகின்றது.
இரவு தூங்குவதற்கு முன்பு குளிப்பதனால் உடல் புத்துணர்ச்சி பெற்று நன்கு தூக்கத்தை நமக்கு தரும் உளவியல் ரீதியாகவும் இரவில் குளிப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
காலை முழுவதும் பகல் முழுவதும் சுற்றிவிட்டு அப்படியே இரவில் தூங்கும் பொழுது முகத்தில் இருக்கும் எண்ணெய் பசையோடு அந்த அழுக்குகளும் சேர்ந்து முகத்தில் பரு வரலாம் இரவு சோப்பு போட்டு நன்றாக உடலை சுத்தம் செய்து குளிப்பதனால் முகப்பரு வராமல் தடுக்கலாம்.
சிலருக்கு பருவநிலை மாறும் பொழுது அலர்ஜி வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். நாள் முழுவதும் வெளியில் அலைந்து திரிந்து விட்டு அப்படியே தூங்கினால் நமக்கு நோய்த்தொற்று வரக் காரணமாக அமையும்.
இரவில் குளிப்பதன் மூலம் இந்த ஆராய்ச்சிகளில் இருந்து தப்பிக்க உதவும். அதுபோல இரவில் தலை குளிக்கவும் நமது முடிக்கு மிகவும் நல்லது ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொள்ள உதவும் இதனால் முடி வளர்ச்சியை அதிகரிக்கும்.