இந்த விதையில் டீ போட்டு குடித்தால், இத்தனை நன்மையா.?!

தர்பூசணி பழத்தின் விதையை வானெலியில் வறுத்து அல்லது நீரில் போட்டு கொதிக்க வைத்து குடித்தால், அதில் இருக்கும் மருத்துவ குணங்கள் மூலமாக நமது உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கிறது. அந்த வகையில் தர்பூசணி பழத்தின் விதைகளின் மருத்துவ நன்மைகளை பற்றி காண்போம்.

தர்பூசணி விதையை ஒரு கையளவு எடுத்துக் கொண்டு அதனை ஒரு லிட்டர் நீரில் சுமார் 15 நிமிடம் கொதிக்க வைத்து காய்ச்சி வடிகட்டி மூன்று நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால் இரத்த சர்க்கரையின் அளவானது குறைந்து சர்க்கரை நோயானது கட்டுப்படுத்தப்படும்.

இதற்கு அடுத்தபடியாக இதயமானது ஆரோக்கியமாக இருக்கும்., தர்பூசணியின் சாற்றை குடித்து வந்தால் இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.

வலிமையான மற்றும் அழகான தலை முடியை பெற தர்பூசணி விதைகளை நீரில் கொதிக்க வைத்து குடித்து வர வர வேண்டும். அதன் மூலமாக தலைமுடி உதிர்வது, தலை அரிப்பு போன்ற பிரச்சனைகள் தடுக்கப்படும்.

இதனால் சருமத்தில் ஏற்படும் சுருக்கம் போன்ற பிரச்சனை குணமாகும்.

இதன் மூலமாக மனித உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமை படுத்தப்பட்டு, உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் அதிகளவு இருப்பதால், உடல் நலத்தை மேம்படுத்தும்.

தர்பூசணி விதைகளை கொதிக்க வைத்த நீரை பருகுவதனால் இரத்த அழுத்தம் கட்டுக்குள் கொண்டு வரப்படுவதோடு, எலும்புகள் மற்றும் தசைகள் வலிமை ஏற்படுத்தப்படும். தர்பூசணி பழத்தின் விதைகளில் இருக்கும் வைட்டமின் பி, காம்ப்ளக்ஸ், நியாசின், தயமின் மற்றும் வைட்டமின் பி6 மூலமாக நரம்பு மண்டலம் சீராக இயங்குவதற்கு உதவுகிறது.