நமது உடலில் உள்ள சத்துக்களின் எண்ணிக்கை குறையும் தன்மை உடையது தான். எனவே வயது அதிகரிக்கும் போது, ஊட்டச்சத்துள்ள உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும்.
அதிலும் குறிப்பாக 40 வயதை கடந்த பின்பு உணவுப் பழக்கத்தில் சில மாற்றங்கள் கொண்டுவர வேண்டியது அவசியம்.
தவிர்க்க வேண்டிய உணவுகள்:-
இந்த மாதிரியான பிரச்சனைகளை எதிர்கொள்ள சரியான வைட்டமின்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
இறைச்சியில் கட்டாயம் மட்டனை குறைத்துக் கொள்வது நல்லது.
கட்டாயம் இரவு நேரங்களில் கீரை உண்பதை தவிர்த்து கொள்ள வேண்டும்.
பன்னீர் சேர்த்த உணவுகளை மாதத்திற்கு ஒருமுறை மட்டும் எடுத்துக் கொள்ளவும்.
பர்கர், பீட்சா போன்ற துரித உணவுகள் உடலில் தேவையற்ற பிரச்சனையை உண்டாக்கும்.
உருளைக்கிழங்கு, வாழைக்காய் போன்ற கிழங்கு வகைகள் மூட்டுபிரச்சனையை தரக்கூடியது.
வாழைத்தண்டு சிறுநீரகத்திற்கு நல்லது. ஆனால் 50 வயதிற்கு மேல் அதே வாழைத்தண்டு சிறுநீரகத்தின் செயல்பாட்டிற்கு தடையாகி செரிமானத்தை கெடுக்கும். முக்கியமாக நீரிழிவு நோயாளிக்கு.
எண்ணெயில் பொரித்த வறுத்த உணவுகளை இரவில் உண்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.