சாண்டியின் மனைவி ஆரம்பித்த புதிய தொழில்..!!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் முழுக்க freeze டாஸ்க் நடைபெற்று வந்தது. இந்த டாஸ்கில் போட்டியாளர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றனர். இதில் லாஸ்லியா பெற்றோர்கள் சென்று லாஸ்லியாவிற்கு டோஸ் விட்டது, தர்ஷன் அம்மாவின் பிறந்தநாளை கொண்டாடியது, கவின் நண்பர் கவினை அறைந்தது போன்ற சம்பங்கள் சுவாரசியத்தை ஏற்படுத்தி இருந்தது.

ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்று சாண்டியின் மகள் வந்தது தான் இந்த வாரத்தின் சிறந்த எபிசோடாக இருந்தது என்று அனைவரும் மகிழ்ந்துள்ளனர். அவ்வளவு ஏன் இதுவரை வந்த பிக் அவ்வளவு ப்ரோமோவிலேயே நேற்று சாண்டியின் மகள் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்ற ப்ரோமோ தான் அதிக பார்வையாளர்களை கொண்ட ப்ரோமோவாக இருந்து வருகிறதாம். அந்த அளவிற்கு சாண்டி மகள் லாலா ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார்.

இந்நிலையில் சாண்டியின் மனைவி சில்வியா சாண்டி நேற்று இன்ஸ்டாகிராமில் தனது மகள் லாலா, குருநாதர் என்று அச்சிடப்பட்ட டி-ஷர்ட்டை அணிந்திருக்கும் ஒரு புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். மேலும், அதில், அது போன்ற டி-ஷர்ட்டை பெற விரும்புவார்கள் fullyfilly என்ற இணையத்தில் தொடர்பு கொண்டு வாங்கி கொள்ளலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

பிக்பாஸ் மூலம் பலருக்கும் பல்வேறு விதமான புகழ்கள் கிடைத்துள்ளது. ஆனால், பிக்பாஸ் மூலம் சாண்டி மனைவி இப்படி ஒரு வியாபாரத்தை துவங்கி இருக்கிறார். இப்படி இது சாண்டியின் மனைவியுடையது தானா இல்லை வேறு யாராவது மூலம் இந்த தொழிலை ஆரம்பித்துள்ளாரா என்பது தெரியவில்லை.

 

மேலும், சாண்டி மனைவி தான் சாண்டிக்கும் அவரது நண்பர்களுக்கு டீ-ஷர்டை அனுப்பி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.