இப்படி ஒரு போட்டியா? வாயைப்பிளக்க வைத்து கோப்பையை தூக்கிய இந்திய அணி!

U19 ஆசிய கோப்பை தொடரானது, இலங்கையில் நடைபெற்றது. மொத்தம் எட்டு நாடுகள் கலந்து கொண்ட இந்த போட்டி தொடரில் பைனலுக்கு இந்தியா பங்களாதேஷ் அணிகள் முன்னேறின.

பரபரப்பாக நடைபெற்ற U19 ஆசிய கோப்பை பைனலில் வங்கதேச அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

இந்தியா – வங்கதேச அணிகள் மோதிய இறுதிப்போட்டி இலங்கையின் கொழும்பு மைதானத்தில் நடைப்பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

ஆடுகளம் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்ததால் இந்திய அணி வீரர்கள் ஆரம்பம் முதலே விக்கெட்டை பறிகொடுத்தனர். பங்களாதேஷ் பந்துவீச்சில் தாக்குப்பிடிக்க முடியாமல் 32.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து வெறும் 106 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக கரண் லால் 37 ரன்கள் எடுத்தார்.

மிகவும் எளிதான இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணியும், இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சொதப்பியது. முதல் 5 பேர் ஒற்றை இலக்கங்களில் வெளியேறியதால் அந்த அணி ரன் எடுக்க முடியாமல் தவித்தது.

பரபரப்பாக சென்ற போட்டியில் இறுதியாக வங்கதேச அணியை 5 ரன்கள் வித்தியாசத்தல் வீழ்த்தி இந்திய அணி ஆசிய சாம்பியன் பட்டத்தை வென்றது. மொத்தம் 5 விக்கெட்களை வீழ்த்தி  வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த இந்திய அணியின் அதர்வா அங்கோலேகர் ஆட்டநாயகனாகாவும், தொடர் நாயகனாக இந்திய பேட்ஸ்மேன் அர்ஜூன் அசாத் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்திய U19 அணி ஆசிய கோப்பையை கைப்பற்றுவது இது 7 ஆவது முறையாகும். பாகிஸ்தான். ஆப்கானிஸ்தான் அணிகள் தலா ஒருமுறை சாம்பியன் பட்டத்தினை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.