புதிய உடையில் இந்திய கிரிக்கெட் அணி!

இந்தியா தென் ஆப்ரிக்கா அணிகள் இடையேயான மூன்று 20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் போட்டி நாளை இமாச்சல பிரதேசம் மாநிலம் தர்மசாலாவில் நடக்கவுள்ளது.

இந்த போட்டிக்கு முன்பாக இன்று இந்திய வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டனர். மழை அதிகமாக பெய்ததால் உள்அரங்கத்தில் இந்திய வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டனர்.

இந்த போட்டி தொடர் முதல் இந்திய அணியின் சீருடை ஸ்பான்சர் நிறுவனமாக BYJU’S ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை OPPO சீருடையில் இருந்த இந்திய அணியினர் நாளை முதல் BYJU’S என்ற எழுத்துகள் பொறித்த சீருடையுடன் களம் காண்பார்கள்.

இன்று BYJU’S எழுத்துகளுடன் உடைய உடைகளில் பயிற்சியில் ஈடுபட்ட இந்திய அணி வீரர்கள்.