தேவையான பொருட்கள் :
அரிசி மாவு – 1 1/2 கப்
ரவை – 1 கப்
உப்பு – தேவையான அளவு
மைதா மாவு – 4 டேபிள் ஸ்பூன்
கெட்டியான மோர் (அ) புளித்த தயிர் – 1 கப்
கறிவேப்பிலை, கொத்துமல்லி – சிறிதளவு
பச்சைமிளகாய் – 5
முந்திரி – 15
சீரகம் – 1 டீஸ்பூன்
செய்முறை :
பச்சைமிளகாய், கொத்தமல்லி, மற்றும் முந்திரி ஆகியவற்றை பொடிபொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் ரவை, மைதா, அரிசிமாவு, உப்பு போன்றவற்றை சேர்த்து நன்றாக கலந்து அதனுடன் மோர் விட்டு கரைத்து,பின், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கட்டியில்லாமல் கரைத்து அரைமணி நேரம் ஊற வைக்கவும்.
மாவு, சாதாரண தோசை மாவைவிட சற்று நீர்க்க இருக்கவேண்டும். அதனால் எப்பொழுதும் சேர்ப்பதை விட ஒரு கப்பிற்கும் அதிகமாகவே தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.
தோசை வார்க்கும் முன்பாக மாவுடன் நறுக்கிய பச்சைமிளகாய், கறிவேப்பிலை, சீரகம், கொத்தமல்லி, உடைத்த முந்திரி போன்றவற்றை சேர்த்து கலக்கவும்.
பின்னர் தோசைக்கல் அடுப்பில் வைத்து எப்பவும் போல தோசைவார்த்து ணெய் ஊற்றி பிரட்டி எடுத்து சாப்பிட்டால் அற்புதமான சுவை கிடைக்கும்.