தற்போதுள்ள சூழ்நிலையில் காய்ச்சல்கள் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. பல புதிய வகையான காய்ச்சல்கள் தொடர்ந்து கண்டறியப்பட்டு வரும் பெரும் துயரமும்., காய்ச்சல்களால் பல உயிரிழப்புகள் தொடர்ந்து ஏற்பட்ட வண்ணம் உள்ளது.
இந்த நிலையில்., ஆசிய நாடுகளை பொறுத்த வரையில்., அதிகஅளவில் டெங்கு காய்ச்சலானது பரவி வருவதும்., நேபாள நாட்டில் ஒரு வாரத்திற்குள்ளாகவே., சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அதிகளவு பாதிக்கப்பட்டு இருப்பது பெரும் அதிர்வலையை பதிவு செய்துள்ளது.
நேபாள நாட்டில் பருவமழை முடியும் தருவாயில் இருக்கும் நிலையில்., கொசுக்களின் தாக்கமும் அதிகரித்து காணப்பட்டுள்ளது. மேலும்., கொசுக்களின் ஆதிக்கத்தால்., டெங்கு காய்ச்சலின் அபாயமும் அதிகரித்துள்ளது.
கொசு வகைகளில்., ஏடிஸ் வகை கொசுக்களின் மூலமாக பரவும் டெங்கு காய்ச்சலானது பரவி வரும் நிலையில்., டெங்கு காய்ச்சலால் தலைவலி., வாந்தி., மயக்கம் மற்றும் தசை வலி., மூட்டு வலி மற்றும் தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனை உருவாகவும் வாய்ப்புள்ளது.
மேலும்., நேபாளத்தில் கடந்த சில நாட்களில் மட்டுமே டெங்குவால் பாதிக்கப்பட்ட நபர்கள் மூவர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். ஒரு வாரத்திற்குள்ளாகவே சுமார் 2559 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக நேபாள நாட்டின் மக்கள் கடும் அச்சத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
டெங்கு காய்ச்சலை குறைத்து., கொசுக்களை ஒழிப்பதற்கு பல முயற்சிகள் மேற்கொண்டு வந்தாலும்., அதன் முயற்சிகள் அனைத்தும் இறுதியில் பலனற்று போகிறது. மேலும்., கொரிய நிறுவனத்தின் உதவியோடு தடுப்பு மருந்துகள் அடிக்கும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.