காலை மடக்கி மடித்து கொண்டு சம்மணமிட்டு (சுக ஆசனம்) சாப்பிடும்போது இரத்த ஓட்டம் வயிற்றுப்பகுதிக்குள் சீராக செல்லும் அதனால் செரிமானம் எளிதாகிறது. காலை நாற்காலியில் தொங்கவிட்டு அமரும் போது இரத்த ஓட்டம் கால் பகுதிக்கு அதிகமாக செல்கிறது. அதனால் செரிமானம் தாமதமாகிறது.
மருத்துவர்கள் சொல்வதற்கு முன்பே சித்தர்கள் இது குறித்து கூறியிருக்கிறார்கள். நொறுக்கத் தின்றால் நூறு வயது என்னும் பழமொழி மூலம் சாப்பிடும் முறையை வலியுறுத்தியிருக்கிறார்கள். உணவை நன்றாக மென்று சாப்பிட்டால் நோயின்றி நூறுவயது வரை ஆரோக்யமாக வாழலாம் என்கிறார்கள்.
உணவை அப்படியே விழுங்காமல் நன்றாக மென்று கூழ் போல் ஆக்கி உமிழ் நீருடன் கலந்து விழுங்கவேண்டும். இது அதீத பலத்தை தருவதோடு உணவில் இருக்கும் சத்துக்களை வீணாக்காமல் உடலுக்கு சேர்க்கும். ஏனெனில் உமிழ் நீரிலுள்ள என்சைம்கள் உணவின் நச்சுத்தன்மையைப் போக்கி உணவு குழலுக்கு செல்கிறது. இதிலிருக்கும் நொதி பித்தத்துடன் இணைந்து உணவை எளிதில் செரிக்க தூண்டும்.
உணவு மட்டுமல்ல குடிக்கும் நீரையும் பொறுமையாக உமிழ்நீரோடு கலந்து குடிக்க வேண்டும் என்றும் கூறி யிருக்கிறார்கள். உமிழ்நீர் வாய்துர்நாற்றத்தைப் போக்குவதோடு வயிற்றில் இருக்கும் புண்களையும் ஆற்றும் வல்லமை கொண்டது. இந்த உமிழ்நீர் சுரப்பில் மாற்றம் இருந்தாலே உடல் ஆரோக்கியம் குறைவதற்கான அறிகுறி என்று புரிந்து கொள்வார்கள் நமது முன்னோர்கள்.