சம்மணமிட்டு சாப்பிடுவதின் அவசியம்.!

நமது பாரம்பரியத்தில் சிறப்பு மிக்கவை பல இருந்தாலும் அதில் ஒன்று விருந்தோம்பல். தலைவாழையில் விருந்து படைத்து வந்தாரை வரவேற்கும் சிறப்பு இன்றுவரை நமக்கு மட்டுமே சொந்தமானது என்பதிலிருந்தே நமது முன்னோர்கள் உணவுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள் என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

தற்போது மேற்கத்திய பாணியில் நாற்காலியில் சாப்பிடுவது நாகரிக வழக்கமாக இருக்கலாம். ஆனால், இது நல்ல ஆரோக்யத்துக்கு பொருந்தாத ஒன்று என்கிறார்கள் பெரியோர்கள். இதனை மருத்துவ ரீதியாக நிரூபித்த பிறகு நவீன பாணி மக்களும் இப்போது கடைபிடிக்க தொடங்கிவிட்டார்கள்.

தற்போது பரவலாக செரிமான பிரச்னை இருந்து வருகிறது. அதில் ஒரு காரணம் உண்ணும் முறை. காலை மடக்கி மடித்து சம்மணமிட்டு (சுக ஆசனம்) சாப்பிடும்போது இரத்த ஓட்டம் வயிற்றுப்பகுதிக்குள் சீராக செல்வதால் செரிமானம் எளிதாகிறது. காலை நாற்காலியில் தொங்கவிட்டு அமரும் போது இரத்த ஓட்டம் கால் பகுதிக்கு அதிகமாக செல்கிறது. அதனால் செரிமானம் தாமதமாகிறது.