இதெல்லாம் தெரிஞ்சா இனி பிஸ்கட்டை தொட்டுகூட பார்க்கமாட்டீர்கள்.!

குழந்தை முதல் பெரியோர் வரை அனைவருக்குமே பிடித்தமான உணவு என்றால் அது கண்டிப்பாக பிஸ்கட் தான்.

ஆனால், பலருக்கும் இந்த பிஸ்கட்டுகளை சாப்பிடுவதன் காரணமாக நம்முடைய உடலுக்கு என்னென்ன பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பது தெரிவதில்லை. என்னென்ன ஏற்படும் என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

ஒரு சிலர்  காலை நேரத்தில் சாப்பிட நேரம் இல்லாததன் காரணமாக டீயை குடித்துவிட்டு  இரண்டு பிஸ்கெட்கள் சாப்பிட்டாம் போதும் என்று நினைத்து விடுகின்றனர். இவ்வாறு செய்வதனால், நாளடைவில் வயிற்றுப்புண் செரிமானக் கோளாறு ஏற்படும்.

மேலும், அதில், சர்க்கரை கொழுப்பு அமிலங்கள் ஆகியவை, பிஸ்கட்டில் மிக அதிகமாக இருக்கின்றது. பிஸ்கெட் தயாரிப்பின் பொழுது, வெப்பநிலையில் எண்ணெய் ஊற்றி சூடு படுத்தும்போது உருவாகும் இந்த டிரான்ஸ்ஃபேட் எத்தனை சதவீதம் இருக்கின்றன என்பதை அதன் உறையில் பெரும்பாலும் குறிப்பிடுவதே இல்லை.

இந்த அமிலங்கள் உடலில் அதிகம் சேரும் போது, கொழுப்பின் அளவு அதிகமாகி இதய நோய்கள் உருவாகக்கூடும்.பிஸ்கட் கெட்டுப்போகாமல் இருப்பதற்காக மற்றும் சுவைக்காக உப்பு அதிகம் பயன்படுத்துகின்றனர்.

இது உயர் இரத்த அழுத்தத்தில் இருப்பவர்களுக்கு தேவையற்ற விளைவுகளை ஏற்படுத்தும். இதெல்லாம் ஆய்வுகளின் மூலம் அறிய வந்து லாட்ஜிற்சியை ஏற்படுத்தியுள்ளது.