ஒரு மனிதனுக்கு மிகவும் முக்கியமான தேவை சரியான தூக்கம் தான். சாப்பிடாமல் கூட ஒரு மனிதன் பல நாட்கள் உயிர் வாழ முடியும். ஆனால், சரியான உறக்கம் இல்லாவிட்டால் நிச்சயம் மரணம் தான் கிட்டும். ஒவ்வொருநாளும் பொதுவாக நாம் ஏழு முதல் எட்டு மணி நேரம் வரை தூங்க வேண்டும் என மருத்துவ ஆய்வு கூறுகின்றது.
பலர் இரவு ஒரு மணிக்கு உறங்க ஆரம்பித்து எட்டு மணிக்கு எழுந்தால் தூங்கும் நேரத்தை சமன் செய்து விடலாம் என்று நினைக்கின்றனர். இதுதான் மிகப்பெரிய தவறு. அனைவரும் கட்டாயம் பதினோரு மணிக்கு முன்பாகவே தூங்க வேண்டும். ஏனெனில் நம் உடலில் சுரக்கும் ஒரு சில ஹார்மோன்கள் இரவு நேரத்திலும், சூரியன் உதிக்கும் போதும் அந்த வெப்பத்திலும் தான் நமக்கு சுரக்கும்.
பொதுவாக நாம் தூங்கும் போது வெளிச்சம் இல்லாத, இருட்டு நேரத்தில் மட்டுமே இந்த ஹார்மோன் சுரக்கின்றது. இந்த மேலோட்டிலின், என்கின்ற ஹார்மோன் குறைபாட்டால் பல்வேறு நோய்கள் நம்மைத் தாக்கும் அபாயம் ஏற்படும். இந்த ஹார்மோன் குறைபாட்டால் வரும் பிரச்சினைகள் இளமை வயதில் எவ்வித அறிகுறியும் காட்டாது.
ஆனால் 27 முதல் 30 அது வயதிற்குள் பல்வேறு உடல் உபாதைகளை நமக்கு ஏற்படுத்தும். முதலில் செரிமான கோளாறு வாய்வுத் தொல்லை என ஆரம்பிக்கும். அதன் பிறகு அடுத்தடுத்த கட்டத்தை நோக்கிச் சென்று, 35 வயதிற்குப் பிறகு இந்த பிரச்சனையானது முற்றிய நிலையில் 40 வயதிற்கு மேல் புற்றுநோயாக மாறவும் வாய்ப்பு இருக்கின்றது. எனவே சரியான நேரத்தில் உறங்கி சரியான நேரத்தில் எழுவது அன்றைய பொழுதை மட்டுமல்ல உங்கள் உடலையும் ஆரோக்கியமாக வைக்கும்.