மனஅழுத்தத்தை கட்டுப்படுத்தும் நடிகர் கமலஹாசன் வைத்தியம்..!

கமலஹாசன் நடித்த வசூல் ராஜா எம்.பி.பி.எஸ். படத்தில் வரும் காட்சி ஒன்றில் கட்டிப்பிடி வைத்தியம் செய்தால் மனஅழுத்தம் குறைந்து மனஉறுதியை ஏற்படுத்தும் என்பதை போல் அந்த காட்சியில் தெரிவித்திருப்பார்.

உண்மையிலே கட்டிப்பிடித்து கொள்வது மனஅழுத்தத்தை குறைத்து தைரியத்தையும், நம்பிக்கையும் உருவாக்கும். காதலியை மற்றும் மனைவியை மட்டுமல்லாமல் அவ்வப்போது நண்பர்களையும் கட்டிப்பிடிப்பது மனநிம்மதியை தரும்.

கட்டிப்பிடித்தல் உங்கள் மன உறுதியை மேம்படுத்தும். உங்கள் தாழ்வு மனப்பான்மை, தயக்கம், பயம் உள்ளிட்டவற்றைப் போக்கி பாதுகாப்பு உணர்வைத் தரும். இதனால்தான் ஒருவர் கவலையாக இருக்கும்போது ஆறுதல் கூறும் நபர் கட்டிப்பிடித்து ஆறுதல் கூறினால் கவலையில் இருந்து எளிதில் விடுபடலாம்.

கட்டிப்பிடித்தல் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் என மருத்துவ விஞ்ஞானிகள் கூறுகின்றனர். காதலி கட்டிப்பிடித்தல் ரத்த அழுத்தம் குறையுமாம்! இதனை உணர்ந்த மேலை நாட்டு வயதான தம்பதிகள் அவ்வப்போது கட்டிப்பிடித்து உலா வருகின்றனர்.

கட்டிப்பிடித்தால் தமஸ் சுரபி ஊக்கப்படுத்தப்படுகிறது. இது வெள்ளை அணுக்களை அதிகமாகத் தயாரிக்கிறது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிக்கிறது. ஆகவே அதிகமாகக் கட்டிப்பிடிக்கும் தம்பதிகள் அடிக்கடி நோய்வாய்ப்படுவதில்லை என தகவல் அளிக்கின்றனர் மருத்துவர்கள்.

அடிக்கடி கட்டிப்பிடித்தல் பெண்களுக்கு ஆக்ஸிடோசின் சுரப்பு அளவை அதிகரிக்கிறது. இதனால் அவர்களுக்கு மனஅழுத்தம் குறைகிறது. இதனாலேயே ஆக்ஸிடோசின் கடில் ஹார்மோன் என அழைக்கப்படுகிறது.