பிக்பாஸ் நிகழ்ச்சியின் 2வது சீசனில் கலந்துகொண்டவர் என்எஸ்கே ரம்யா. பிரபல பாடகியான இவர் பிக்பாஸ் வீட்டில் மிகவும் தெளிவாக விளையாட்டை விளையாடினார்.
அவரின் குணத்தையும் பல ரசிகர்கள் பாராட்டினார்கள். நிகழ்ச்சி முடிந்ததில் இருந்து அவர் என்ன செய்கிறார் என்று ஒன்றுமே தெரியவில்லை. இந்த நிலையில் அவருக்கும், நீலகுயில் சீரியல் புகழ் சத்யா அவர்களுக்கு திருமணம் முடிவாகியுள்ளதாக செய்தி வந்துள்ளது.
அதோடு பிக்பாஸில் அதே 2வது சீசனில் பங்குபெற்ற ஜனனி ரம்யா மற்றும் சத்யா ஜோடியின் புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்து கூறியுள்ளார்.
நிச்சயதார்த்தம் முடிந்ததா அல்லது மிகவும் சிம்பிளாக திருமணமே முடிந்துவிட்டதா என்பது தெரியவில்லை.
View this post on Instagram