சுவையான ஓட்ஸ் ஆம்லெட்.!செய்வது எப்படி.?

ஓட்ஸ் மற்றும் முட்டை இரண்டுமே அதிக ஊட்டச்சத்துகளைக் கொண்டவை. 100 கிராம் ஒட்ஸில் வெறும் 68 கலோரிகள் மட்டுமே உள்ளன. ஆனால் ஊட்டச் சத்துகளோ 2.4 கிராம் உள்ளன.

இதை விட சிறந்த காலை உணவு இருக்கவே முடியாது. இன்றே செய்து பாருங்கள்.

தேவைப்படும் பொருட்கள் : 

ஓட்ஸ் – அரை கப்
முட்டை – 4
பால் – அரை கப்
வெண்ணெய் – அரை ஸ்பூன்
வெங்காயம் – 2
கொத்தமல்லி – சிறிதளவு
தக்காளி – 1
கேரட் – 1
குடை மிளகாய் – 1
பூண்டு – 5-௬ பல்
பச்சை மிளகாய் – 2
மிளகுத் தூள் – ஒரு சிட்டிகை
மஞ்சள் – ஒரு சிட்டிகை
உப்பு – தேவையான அளவு

செய்யும் முறை:

ஓட்ஸை மிக்ஸியில் மைய அரைத்து வைத்துக்கொள்ளவும்.

அரைத்து வைத்த போவுடரில் மேலே குறிப்பிட்டுள்ள அனைத்துப் பொருட்களையும் சேர்த்து நன்கு கலக்கவும். தற்போது தவாவில் வெண்ணெய் விட்டு சீராகத் தேய்க்கவும்.

கலக்கிய ஓட்ஸ் கலவையை தோசை போல் தவாவில் ஊற்றித் தேய்க்கவும். தேவைப்பட்டால் சுற்றிலும் எண்ணெய் விடவும். டயட் இருப்போர் ஆலிவ் எண்ணெய் ஊற்றலாம்.

சுவையான ஓட்ஸ் ஆம்ப்லேட் தயார். இதை அப்படியேவும் சாப்பிடலாம் அல்லது டொமேட்டோ சாஸ் தொட்டுக்கொள்ளலாம்.