மேங்கோ லஸ்ஸி வெறும் தாகத்திற்கு மட்டுமல்ல… அதன் சுவையும், வாசனையும் நம்மை புத்துணர்ச்சியாக்கி எனர்ஜியைக் கொடுக்கக் கூடியது.
தேவையான பொருட்கள்:
மாம்பழம் – 1
தயிர் – 1 கப்
மேங்கோ ஐஸ்க்ரீம் – 1 கப்
டூட்டி ஃப்ரூட்டி – 1 ஸ்பூன்
பால் – 1/3 கப்
ஐஸ் கட்டித் தூள் – 1 கப்
ரோஸ் வாட்டர் – 1 ஸ்பூன்
பாதாம் – 1 ஸ்பூன்
சர்க்கரை – 3 ஸ்பூன்
செய்யும் முறை:
மாம்பழத்தில் உள்ள சதைகளை தனியாக பிரித்து எடுத்து வைத்து கொள்ளவும். பின்னர் புளிப்பு இல்லாத புது தயிரை நன்றாக அடித்து வச்சிக்கோங்க.
தற்போது பாம்பழ சதையை மிக்ஸியில் நன்கு அடித்துக்கொள்ளவும். தற்போது சர்க்கரை, பால் சேர்த்து மீண்டும் மிக்ஸியில் நன்றாக அடித்துக்கொள்ளவும்.
அடுத்ததாக தயிர் சேர்க்கவும். அதோடு ஐஸ்கட்டி, ரோஸ் வாட்டர் சேர்த்து மீண்டும் நன்றாக ஓட்டவும்.
தற்போது அதை ஒரு கிளாசில் ஊற்றி மேங்கோ ஐஸ்கிரீம் ஸ்கூப்பை அதன் மேல் பதமாக வைக்கவும்.
பின் டூட்டி ஃப்ரூட்டியை தூவி, உடைத்த பாதாம் பருப்பையும் தூவவும். சுவையான மேங்கோ லஸ்ஸி தயார்.