இந்திய அணி உலகக்கோப்பை போட்டிகளில் மிகச்சிறப்பாக விளையாடி இருப்பது, கோப்பையை வென்ற 1983 மற்றும் 2011ம் ஆண்டு, அதற்கு அடுத்தபடியாக இறுதிப்போட்டி வரை வந்து கோப்பையை தவறவிட்டது 2003ம் வருடம். அந்த வருடம் அந்த அணியில் விளையாடிய 15 வீரர்களில் ஏற்கனவே 12 வீரர்கள் ஓய்வு பெற்று விட்டார்கள்.
அந்த அணியில் இடம்பெற்றிருந்த சச்சின், கங்குலி, சேவாக், டிராவிட், கைப், யுவராஜ், ஸ்ரீநாத், கும்ளே, பாங்கர், சாஹீர் கான், நெஹ்ரா, அகர்கர் ஓய்வு பெற்ற நிலையில் இன்னும் ஓய்வு பெறாமல் ஹர்பஜன் சிங்கும், பார்திவ் படேலும் இருக்கிறார்கள். இதில் மீதம் இருக்கும் தினேஷ் மோங்கியா இன்று ஒய்வு அறிவித்துள்ளார்.
2003 அணியில் அப்போது எதிர்பாராதவிதமாக கங்குலி தலைமையிலான அணியில் லக்ஷ்மணை முந்தி அணியில் இடம் பிடித்தவர் மோங்கியா. தினேஷ் மோங்கியா ஆல்ரவுண்டர் என்பதால் 2003 உலகக் கோப்பை உள்ளிட்ட போட்டிகளில் சிறப்பாக விளையாடி அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு அளிக்கப்பட்டது. இடையே அவருடைய ஆட்டம் சொதப்பியதால் அவரை அணியில் இருந்து ஓரங்கட்ட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
அவர் 2007ஆம் ஆண்டு வங்கதேச அணிக்கு எதிராக தன்னுடைய இறுதி போட்டியில் விளையாடியது குறிப்பிடத்தக்கது. அதன்பிறகு கடந்த 12 வருடங்களாக அவர் இந்திய அணிக்காக விளையாட வில்லை. இதற்கிடையே 2007 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தோல்விக்கு பின்னர் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு எதிராக தொடங்கப்பட்ட இந்திய கிரிக்கெட் லீக் தொடரில் அவர் விளையாடியதால் பிசிசிஐயின் தடையை பெற்றார். அதன்பிறகு தடையில் இருந்து மீண்ட அவர் மீண்டும் பஞ்சாப் அணிக்கு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். இடையிடையே அவர் சில வெளிநாட்டு அணிகளுக்காக விளையாட போவதாகவும் செய்திகள் வெளியாகியது
ஒரு வருடம் கவுண்டி அணிக்காக அவர் முழுவதுமாக விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 57 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள தினேஷ் மோங்கியா இந்திய அணிக்காக ஒரு 20 ஓவர் போட்டியும் விளையாடியுள்ளார். இந்தியாவின் முதல் சர்வதேச 20 ஓவர் போட்டியில் அதிகபட்ச ரன்கள் அடித்த வரும் இதே மோங்கியா தான் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் அந்த போட்டியில் 38 ரன்கள் எடுத்து இருந்தார். அவருக்கு அடுத்தபடியாக ஷேவாக்கும், தினேஷ் கார்த்திக்கும் அடித்தனர். அந்த ஆட்டத்தில் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முதல் பந்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. சச்சின் டெண்டுல்கரும் அந்த ஒரு போட்டியில் தான் இந்திய அணிக்காக 20 ஓவர் போட்டியில் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கடந்த 12 வருடங்களாக விளையாடாமல் இருந்து வந்த மோங்கியா தற்போது ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இவர் இந்திய அணிக்காக முதல் தர போட்டிகளிலும் 2007 மட்டும் தான் இறுதியாக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. 2003ஆம் ஆண்டு உலக கோப்பையில் விளையாடிய இந்திய அணி வீரர்களில், இன்னும் ஓய்வு பெறாமல் இருப்பது அந்த தொடரில் ஒரு போட்டியில் கூட விளையாடாத அப்போது மிகவும் இளம் வயது வீரராக இருந்த பார்திவ் படேலும், ஹர்பஜன் சிங்கும் தான்.
தினேஷ் மோங்கியா 57 போட்டிகளில் மட்டுமே விளையாடினாலும் அவருடைய சாதனை ஒன்று இந்திய அணிக்காக எப்பொழுதும் இருந்து வருகிறது. அதாவது தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி முழுமையாக 50 ஓவரையும் பேட் செய்த பேட்ஸ்மேன்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய சார்பில் இந்த சாதனையை தொடக்க ஆட்டக்காரர்களாக கோலோச்சிய சச்சின் டெண்டுல்கர் சௌரவ் கங்குலி செய்து இருந்த நிலையில் மூன்றாவது வீரராக தினேஷ் மங்கிய அந்த சாதனையை செய்தார்.
சவுரவ் கங்குலி 4 முறையும் சச்சின் டெண்டுல்கர் மூன்று முறையும் அந்த சாதனையை நிகழ்த்திய நிலையில், ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒரு போட்டியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி இறுதி வரை ஆட்டமிழக்காமல் 159 ரன்களை குவித்தார். அதுவே அவருடைய தனிப்பட்ட அதிகபட்ச ரன்னாக அமைந்தது. அவருக்கு அடுத்தபடியாக இந்தியாவின் ரோகித் சர்மா ஸ்ரீலங்காவிற்கு எதிராக கொல்கத்தாவில் நடைபெற்ற அவருடைய அதிகபட்ச ஒருநாள் போட்டிகளில் சாதனை ரன்னாக இருக்கும் 264 ரன்கள் அடித்த அன்று அவர் முழுமையாக 50 ஓவர்களில் பேட் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சச்சின் கங்குலி ரோஹித் ஜாம்பவான்கள் வரிசையில் இடம்பிடித்த சாதனை பட்டியலில் மோங்கியவும் இருக்கிறார் என்பதை அவருடைய கிரிக்கெட் வாழ்வின் சிறப்பான ஒரு தருணம் ஆகும்.