சுவையான கடலை மிட்டாய் செய்வது எப்படி?!

தற்காலத்தில் பல்வேறு விதமான பிளாஸ்டிக் பைகளில் அடைக்கப்பட்ட உணவுகளை உண்டு, சிறுவயதிலேயே பல்வேறு விதமான உடல் பாதிப்புக்கு ஆளாகின்றனர் குழந்தைகள். இவற்றை தடுக்க கடலைமிட்டாய் போன்ற இயற்கை உணவுகளை செய்து கொடுக்கலாம். எவ்வாறு செய்வதென பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

அரிசி மாவு – சிறிது.
வெல்லம் – அரை கப்
வேர்க்கடலை – 2 கப்
ஏலக்காய்தூள் – அரை டீஸ்பூன்

செய்முறை: 

வேர்க்கடலையை சுத்தம் செய்து வறுத்து தோல் நீக்கிக்கொள்ளுங்கள்.

பின்னர், வெல்லத்தை சீவி பொடியாக்கி கால் கப் நீர் சேர்த்து, பாகு செய்து கொள்ளுங்கள்.

கடலையை பாகில் கொட்டி, கிளறி சிறிது ஏலக்காய்தூள் சேர்த்துக் கிளறி கடலை உருண்டைகளைப் பிடியுங்கள்.

வெப்பத்தை தாங்க முடியாதவர்கள் அரிசிமாவை கைகளில் தொட்டுக்கொண்டு உருட்டலாம். முதலில், வேகவேகமாக உருண்டையை அது வரும் வடிவத்தில் பிடித்துப் போட்டுவிட்டு, பின்னர், அழுத்தி உருண்டை பிடிக்கலாம்.