பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவடைய இன்னும் நான்கு வாரமே இருக்கிறது. இந்த சீசன் டைட்டில் வின் யார் என்பதில் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். ஆனால் இது வரை பிக்பாஸ் டாஸ்க் பெரிய அளவில் கடுமையான டாஸ்க் வழங்கப்படவில்லை என்பதே அனைவரின் கோரிக்கையாகவும் உள்ளது.
இந்நிலையில் இந்த வாரம் டிக்கெட் டு பினாலே அதாவது இறுதி போட்டிக்கு நேரடியாக செல்லும் வாய்ப்பிற்கான டாஸ்க் நடைபெற்று வருகிறது. இந்த டாஸ்க் இந்த வாரம் முழுவதும் நடைபெற இருக்கிறது. இந்த வாரத்தின் இறுதியில் அதிக மதிப்பெண்களை பெரும் போட்டியாளருக்கு கோல்டன் டிக்கெட் வழங்கப்படும்.
எனவே, இந்த டாஸ்கில் வெற்றிபெற போட்டியாளர்கள் அனைவரும் கடுமையாக போராடி வருகின்றனர். இதுவரை நடந்து முடிந்த டாஸ்கில் தர்ஷன் தான் முன்னிலையில் இருக்கிறார். இது ஒருபுறம் தான் இந்த வாரத்தின் நாமினேஷன் நேற்று நடைபெற்று இருந்தது. அதில் சேரன், கவின், லாஸ்லியா, ஷெரின் ஆகியோர் இந்த வாரம் நாமினேட் ஆகியுள்ளனர். இந்த வாரம் கவினை தான் அதிகம் பேர் நாமினேட் செய்துள்ளனர். இருப்பினும் கவினுக்கும் வழக்கம் போல அதிக வாக்குகள் பதிவாகி வருகிறது.
இந்த நிலையில் ஒருவேளை இந்த வாரம் நாமினேஷனில் இடம் பெற்றுள்ள சேரன், கவின், லாஸ்லியா, ஷெரின் ஆகிய நால்வரில் யாரவது ஒருவர் இந்த பினாலே டாஸ்கில் வெற்றி பெரும் நிலையில், ஒருவேளை அவர்கள் இந்த வாரம் வெளியேறினால், இந்த டாஸ்கில் இரண்டாம் இடத்தில் வரும் நபருக்கு கோல்டன் டிக்கெட் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. ரசிகர்களும் இதை ஆவலுடன் காத்திருக்கின்றனர்.