காலையில் எழுந்ததும் கண்களை சுற்றி வீக்கமாக உள்ளதா?

காலையில் தூங்கி எழுந்தவுடன் உங்கள் கண்களை சுற்றி வீக்கம் இருக்கிறதா? கவலை வேண்டாம் இதற்கு காரணம் தூக்கமின்மை, சோர்வு, மன அழுத்தம், உடலில் நீரிழிப்பு போன்றவை ஏற்படும்போது, கண்களை சுற்றி வீக்கம் உண்டாகும். இதனை சரிசெய்ய உங்கள் வீட்டிலேயே முயற்ச்சிக்கலாம்..

கற்றாலை:

சருமம் மற்றும் கூந்தல் பராமரிப்பில் கற்றாலை பயன்படுத்தப்படுகிறது. காற்றாலை ஜெல்லை ஃப்ரிட்ஜில் வைத்து, கண்களை சுற்றி தடவி சில நிமிடங்கள் கழித்து உலர்ந்த பின் கழுவி விடவும். தொடர்ச்சியாக கற்றாலை ஜெல்லை தடவி வந்தால் வீக்கம் குறையும்.

வெள்ளரி:

வெள்ளரியை கொண்டு கண்களின் ஆரோக்கியத்தை பராமரிக்கலாம். வெள்ளரியை மெல்லிதான துண்டுகளாக நறுக்கி, சிறிது நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து, கண்களுக்கு மேல் வைத்திருந்து எடுக்கலாம். இதனால் கண்களுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும். மேலும் கருவளையம் மறையும். கண்களை பிரகாசமாக்கும் சக்தி வெள்ளரிக்கு உண்டு.

டீ பேக்ஸ்:

தேநீர் குடித்தபின் அந்த டீ பேக்கை தூக்கி எறிந்துவிடாமல், அதனை வெதுவெதுப்பான நீரில் சிறிது நேரம் வைத்திருந்து, பின் அதனை மீண்டும் ஃப்ரிட்ஜில் வைக்கவும். நன்கு குளிர்ந்த பிறகு, கண்களுக்கு வேல் சில நிமிடங்கள் வைத்திருந்து எடுக்கலாம். இவ்வாறு வாரம் மூன்று முறை செய்து வரலாம். அப்படி செய்தால் கண்களுக்கு நல்ல ஓய்வு கிடைத்து, வீக்கம் குறையும்.

காபி:

அழகு பராமரிப்பில் காபி பவுடர் பயன்படுத்தப்படுகிறது. காபி தூள் கொண்டு பாடி ஸ்க்ரப் செய்யலாம். காபியில் ஆண்டி-இன்ஃப்ளமேட்ரி தன்மை இருப்பதால், சிறிதளவு காபி தூள், தேங்காய் எண்ணெய் இரண்டையும் நன்கு கலந்து, கண்களை சுற்றி தடவி, 10-12 நிமிடங்கள் வரை வைத்திருந்து கழுவலாம். இப்படி செய்து வரும்போது வீக்கம் குறையும்.

கோல்டு ஸ்பூன்:

இரண்டு ஸ்பூன்களை எடுத்து ஃப்ரிட்ஜில் வைக்கவும். குளிர்ந்தபின், தனை கண்களுக்கு கீழ் சில நிமிடங்கள் வைத்து எடுக்கலாம். இந்த குளிர்ச்சி கண்களின் சோர்வை போக்கி, குளிர்ச்சியடைய செய்யும். மேலும் வீக்கத்தையும் குறைக்கும்.

தவிர்க்க வேண்டியவை:

  • அதிகமாக கண்களுக்கு ஓய்வு கொடுங்கள்.
  • நாள் ஒன்றில் உணவில் உப்பு அதிகம் சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்கவும்.
  • தினமும் நிறைய தண்ணீர் அருந்த வேண்டும்.
  • புகைப்பிடிப்பதை தவிர்க்க வேண்டும்.
  • கண்களில் சூரிய ஒளி நேரடியாக படுவதை தவிர்க்கவும்.
  • தூங்க செல்வதற்கு முன் மேக்கப்பை நீக்கிவிட வேண்டும்.
  • தேவைப்படும்போது கண்களுக்கு உண்டான கிரீம் தடவலாம்.